வடக்கு அரியநாயகிபுரம் கோயிலில் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2012 11:06
முக்கூடல்: வடக்கு அரியநாயகிபுரம் கைலாசநாதர் உடனுறை அரியநாயகி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. பழம்பெருமை வாய்ந்த கைலாசநாதர் உடனுறை அரியநாயகி அம்பாள் கோயில் வடக்கு அரியநாயகிபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் பேரவை தலைவர் சுப்புக்குட்டி, செயலாளர் பிச்சையா, நிர்வாக அலுவலர் சத்யசீலன் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.