ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு காவல் தெய்வம் இருக்கும். குறிப்பிட்ட சில ஊர்களில் நான்கு எல்லைகளிலும் நான்கு தெய்வங்கள் இருக்கும். ஆனால், தஞ்சாவூரில் மட்டும் காளியம்மன் ஒன்பது இடங்களில் காவல் செய்கிறாள். இவளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. நந்தி மாகாளி, செல்லியம்மன், உக்கிரகாளி, கோடியம்மன், வாஞ்சியம்மன், சமவர்த்தினியம்மன், வடபத்ரகாளி, குந்தாளம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகியோரே அந்த காவல் தெய்வங்கள்.