பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
05:04
கோத்தகிரி: கோத்தகிரி சேலாடா ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
காலையில், ஹோம பூஜை, கலச பூஜையை அடுத்து, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுடன், கோவில் பூசாரி, கோவில் மற்றும் கமிட்டியினர் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேக மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சேலாடா சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பஜனை, ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.