மேலுார்: மேலுார் அருகே இ.மலம்பட்டி நெவுலிநாத அய்யனார் கோயில் பங்குனி திருவிழா ஏப்.,2 காப்பு கட்டுதலுடன் துவங்கியது.முதல் நாள் ஆன நேற்று கிராமம் சார்பில் புரவிகள் செய்யப்பட்டு வாச்சாம்பட்டி, கீழவளவு மற்றும் மணப்பட்டி கிராமங்கள் மந்தையில் வைக்கப்பட்டது. இன்று (ஏப்., 10) கிராமங்களில் இருந்து புரவிகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. விழாவில் மூன்று கிராமத்தினர் முககவசம் அணிந்து பங்கேற்றனர்.