இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் 50 பேரை மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.