கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2021 01:04
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள்கோவில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவை, கோ பூஜை, விஸ்வ ரூப தரிசனத்திற்கு பின் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்துமண்டபத்தில் எழுந்தருள செய்தனர். ஏப்.22-ம் தேதி கருட சேவையும், 24ம் தேதி பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், 26ம்தேதி தேரோட்டம்நடக்கிறது.மேலும் கொரோனா தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.