பண்ருட்டி : பண்ருட்டி தனபால் செட்டி தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. கோவிலில் கடந்த ஏப்., 25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பின், 26ம் தேதி முதல் தினம் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. காலை மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை, தீபாராதனைகள் நடந்தன. கணபதி ஹோமம், 108 கலசாபிஷேக பூஜைகள், மூலவர் மாரியம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இரவு மாரியம்மனின் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.