எரியோடு : எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், கம்பிளிதாத்தப்பன், கிருஷ்ணர், ஏழு கன்னிமார், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10ல் இவ்விழா நடக்கும். இதற்காக தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் மாலை அணிந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் கொடுமுடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வருவர்.இந்தாண்டும் கொரோனா தொற்று பிரச்னையால் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான குடங்களில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு எளிமையாக வழிபாடு நடந்தது.