மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2021 06:04
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று வீர அழகர் சுவாமி கைகளில் காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின்போது போது சுவாமி அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருளி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் கொரோனா தொற்றின் காரணமாக எதிர்சேவை மற்றும் வீர அழகர் ஆற்றில் இறங்கும் விழா ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று சுவாமி குதிரை வாகனத்தில் கோயிலுக்குள்ளேயே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.