பதிவு செய்த நாள்
26
ஏப்
2021
10:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி கொரோனா தடுப்பிற்காக அழகர்கோயில் வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் பக்தர்கள் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் ஏப்.,27ல் அவரை வீட்டிலேயே வழிபடலாம் என தென்தமிழக பரியாவரன் சன்ரக்சன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் சமூக ஊடக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: பிலவ ஆண்டில் விவசாயம் செழிக்க, கால்நடை செல்வம் பெருக, சித்ரா பவுர்ணமி அன்று விவசாயம், வீடு, தோட்டத்து மண்ணுடன் பாசனம், வீட்டிற்கு பயன்படும் நீர் வைத்து, முடிந்தால் கோமாதா பூஜை (நாட்டு மாடு) செய்து கள்ளழகர், பூமாதேவி, குலதெய்வத்தை வீடு, விவசாய நிலத்தில் வழிபட்டால் சுப பலன்கள் கிடைக்கும்.கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஏப்., 27க்கு முன் ஏப்., 26ம் வழிபடலாம் வழிபாட்டு நிகழ்வை போட்டோ எடுத்து 94885 52711 வாட்ஸ் ஆப் எண், paryavaran sanrakshansouthtn@gmail.comக்கு அனுப்பினால் இ - சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும், என்றார்.