தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2021 08:04
மயிலாடுதுறை : வைத்தீஸ்வரன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் தருமபுரம் ஆதீனத்தில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது இக்கோயில் செல்வ முத்துக்குமார சுவாமி நவகிரகங்களில் செவ்வாய் பகவான் சித்த மருத்துவத்தில் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து இங்கு வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்து உருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமடையும் என்பது அருள்வாக்கு இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்து யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டது மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் கோவிலை வலம் வந்து ராஜகோபுரங்கள், உள் கோபுரங்கள், விநாயகர், சுவாமி, அம்பாள், செல்வமுத்துக் குமார சாமி, சண்முகர் மற்றும் நவகிரகங்களில் செவ்வாய் பகவான் சன்னதி விமானங்களை வந்தடைந்தது அங்கு வேத மந்திரம் ஓத சிவாச்சாரியர்கள் தர்மபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கடத்தில் இருந்த புனித நீரை கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர.
பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து சுவாமி அம்பாள் செல்வ முத்துக்குமார சுவாமி செவ்வாய் பகவான் சண்முகர் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை பக்தர்கள் கூடுவது தடுக்க வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையும் மீறி பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது மேலும் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் சென்னை மகாலட்சுமி மும்பை ஜெயராமன் மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் பழனிச்சாமி காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் கோவிலுக்குள் வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர் மயிலாடுதுறை எஸ் பி ஸ்ரீ நாதா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.