ராமானுஜர் கள்ளழகருக்குப் படைத்த அக்கார அடிசில் நைவேத்யம் ஆண்டுக்கு ஒருமுறை பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. திருப்பாவையின் 27ம் பாசுரத்தில் அக்கார அடிசில் பற்றி ஆண்டாள் பாடியுள்ளார். இதன் அடிப்படையில் மார்கழி மாதத்தின் 27வது நாளில் அக்கார அடிசில் நைவேத்யம் செய்கின்றனர். 80 லிட்டர் பாலில் 10 கிலோ நெய் சேர்ப்பர். இந்த கலவையில் 5 கிலோ முந்திரி, 5 கிலோ பாதாம், 5 கிலோ பிஸ்தா, 5 கிலோ வெள்ளரி விதை, பச்சசரிசி 1 படி, 30 கிலோ கல்கண்டு, குங்குமப்பூ 25 கிராம் சேர்த்து 8 மணிநேரத்திற்கு சரியான பதத்தில் காய்ச்சினால் இந்த சுவையான பிரசாதம் கிடைக்கும். ஒரு அண்டா பிரசாதம் தயாரிக்கும் அளவு தான் இது. இதைப் போல பெருமாளுக்கு 100 அண்டா பிரசாதம் ராமானுஜர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒரு அண்டாவில் தயாரிப்பதையே 100 பாத்திரங்களில் பிரித்து வைத்து படைக்கின்றனர்.