அளவுக்கு அதிமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் மனித வாழ்வை அலைக்கழிக்கின்றன. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன், வளைகுடா நாடு ஒன்றில் ஓய்வின்றி வேலை செய்தார் ஒரு இளைஞர். உணவு, உடை போன்ற அத்யாவசியத் தேவைகளைக் கூட குறைத்துக் கொண்டார். ஆறுமாதத்திற்குள் கட்டிட வேலை பெரும்பங்கு நிறைவேறியது. புதுமனைப் புகுவிழாவுக்கு நாள் பார்க்கும் நேரத்தில் பக்கவாதத்திற்கு ஆளானார். வாழ்நாள் முழுவதும் நோயின் தாக்கத்தை அனுபவித்தார். வீடு கட்டியும் அதில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எதிர்பார்ப்பு, வேலை, உழைப்பு, ஓய்வு எதுவாக இருந்தாலும் அதற்கான அளவுடன் இருந்தால் எப்போதும் நலமாக வாழலாம்.