Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சைவ சிரார்த்த விதி
படலம் 29: சைவ சிரார்த்த விதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
04:06

29வது படலத்தில் சைவ சிரார்த்த விதி கூறப்படுகிறது. முதலில் தீட்சிதர்களின் சிரார்த்த விதி. குறிப்பாக கூறப்படுகிறது என்பது கட்டளை. பிறகு சாமான்யமாக சிரார்த்தம் நித்யம் நைமித்திகம், காம்யம் விருத்தி சிரார்த்தம் பார்வணசிரார்த்ததினம் என ஐந்து விதமாக கூறி அதன் செய்முறை விளக்கப்படுகிறது பிறகு. பித்ருக்களுக்காக சிரத்தையோடு கொடுக்கக் கூடிய போஜனம் முதலியவை. சிரார்த்தம் எனப்படும் என சிராத்தத்தின் பொருள் கூறப்படுகிறது. பிறகு ஏகோத்திஷ்டம், வருஷ சிராத்தம், நவசிரார்த்தம், ÷ஷாடச சிராத்தம் இவைகளின் காலலக்ஷணம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இறந்தவரை குறித்து முன்பு சொல்லிய ஏகோத்திஷ்டம் முதலிய சிராத்தங்கள் செய்யாத, ஸமயத்தில் இறந்தவர்க்கு பைசாச தன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது. இறந்தவன் இறந்ததினம் முதல் 10 தினங்களில் பிரேதரூபமாகவோ இருந்து வீட்டுவாசலில் விபூதி கிண்ணத்திலும் ஆகாசத்திலும் இருக்கிறான். பிறகு, சபிண்டீ கரணத்திற்கு பிறகு சிவலோகத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. பின்பு ஸோ தகும்பச்ராத்தம் சபிண்டீகரணம் இந்த கர்மாவின் செய்யவேண்டிய காலம், செய்யவேண்டிய கிரமம், நிரூபிக்கப்படுகிறது. பின்பு ஏகோத்திஷ்டம் சிராத்த முடிவில் வைச்யர்களால் பக்ஷசிராத்தம் செய்ய வேண்டும் சூத்திரர்களால் பக்ஷ சிராத்தம் மாசிக சிராத்தமும் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும். மற்ற எல்லா சிராத்தமும் பிராமணர்களுடன் கூட மூன்று. வர்ணத்தவர்களுக்கும் ஸமானமான விதி என கூறப்படுகிறது. பிறகு சிராத்த கர்மாவிற்கு உரியகாலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆயுதம் அக்னி நக்ஷத்திரம் விழுதல், இடிவிழுதல், ஜலத்தில்பிரவேசம் செய்தல் இவைகளால் இறந்தவர்கள் விஷயத்தில் சதுர்தசி திதியில் அவர்கள் திருப்திக்காக சிராத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. கிரஹண காலத்தில் இரவிலும் சிராத்தம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சிராத்த அதிகாரியை அனுசரித்து ஸ்ராத்தத்தில் தள்ளத்தக்கதான காலங்கள் கூறப்படுகின்றன. இங்கு மலமாசமானது, பிதுர்களுக்கும் தேவர்களுக்கும் சொல்லப்படுகிறது.

எல்லா கர்மாக்களிலும் தள்ளுபடி செய்ததும் ஆகும், சூர்யன், கன்னியாராசியை அடைந்த பொழுது (பிதுர்க்கள்) ஸ்ராத்த அன்னத்தை சாப்பிடுவதற்காக புத்திரர்களை அடைகிறார்கள் சூர்யன் விருச்சிக ராசியை அடைந்த பொழுது பிதுர்க்கள் ஆசை அற்றவர்களாக நல்ல சாபத்தை கொடுத்து தன்னுடைய இருப்பிடத்தை அடைகிறார்கள் என கூறப்படுகிறது பிதுர்களை உத்தேசித்து யார் சிரார்த்தம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் சேரில் மாற்றிக்கொண்ட பசுபோல் அழுகிறான் எனப்படுகிறது. பிறகு தெய்வீகமானசிராத்தத்தை முற்பகலிலும் பிதுர்சம்பந்த சிரார்த்தத்தை, பின்பகலிலும் செய்யவேண்டும். ஏகோத்திஷ்ட சிராத்தம் மத்தியாஹ்நிதத்திலும் விருத்தி ஏற்படும் சிராத்தம் என்பதால் காலையிலேயே செய்யவேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆமஸ்ராத்த காலம் அதை செய்பவன் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஸ்ராத்த விஷயத்தில் பிராம்ணர்களை வரிப்பதில் யோக்ய மானவர்களின் நிரூபணம் விஷயத்தில், கல்பம், அனுகல்பம் என்று இருவிதமாக கூறப்படுகிறது. இங்கு தெய்வீக ஸ்ரார்த்த கர்மாவில் பிராம்ணர்களை பரீசிக்க வேண்டாம் என கூறப்படுகிறது பிறகு சிராத்தத்தை செய்பவனுக்கும் ஸ்ராத்தத்தில் வரித்து பூஜிப்பவனுக்கும் உள்ள நியமங்கள் தள்ள தக்கவைகள் விளக்கப்படுகின்றன. இங்கு ஸ்ராத்தத்தில் சுத்தமாக இருப்பது கோபமில்லாமல் இருப்பது அவசரப்படாமல் இருப்பது ஆகிய மூன்றும் முக்கியமான விஷயமாகும். நடுப்பகல், நல்லதர்பம், எள்ளு இவைகள் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என ஸ்ராத்தத்தில் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. வரகு உப்பு, நாவல்பழம் பூசனிக்காய், சொரைக்காய், பச்சை நிற புடலங்காய், எருமைபால், இவைகள் தள்ளுபடி செய்ய தக்க பொருள்களாகும்.

சிராத்தத்தில் சேர்த்துக் கொள் தக்கவையும் தகாதவையான விஷயங்களும் கூறப்படுகின்றன. விரத நியம முறை பெண்வயிற்று பேரனை ஸ்ராத்தத்தில் முயற்சியுடன் சாப்பிடச் சொல்லவும் என கூறப்படுகிறது. பிராம்ணர் களை வரிக்கும் விஷயத்தில் சிரேஷ்டங்கள் நிரூபிக்கப்படுகின்ற பிதுர்களுக்காக மூன்று நபரை நியமித்தால் தேவ விஷயத்தில் இரண்டு நபரை நியமிக்க வேண்டும் என கூறப்படுகிறது. தீட்சிதர்களின் விஷயத்தில் பிதுர்களுக்காக ஈசன் ஸதாசிவன், அனந்தன், என்று மூன்று பெயருடன் பூஜிக்க தக்கவர்கள் ஆகும். விஸ்வே தேவர்களுக்கு ருத்திரனும் அனந்தனும் பூஜிக்கத் தக்கவர் ஆவர். ருத்திரர்களின் விஷயத்தில் பிதுர்களுக்காக ஸ்கந்த, சண்ட, கணேசர்கள், மூவரும் பூஜிக்க, தக்கவர் ஆவர். விஸ்வதேவஸ்தானத்தின் பொருட்டு நந்தி, மஹா காலரை, பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. 5 நபர் கிடைக்காத பட்சத்தில் இரு நபரை அமர்த்தலாம் என கூறப்படுகிறது. பிறகு சாப்பிடுவதற்காக பிராமணர்களை வரிக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு சிராத்த தினத்திற்கு முன் தினத்திலேயே வரிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு கால் அலம்புவதற்காக மண்டலம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு பிதுர்க்களுக்கும் தேவர்களுக்கும் அர்க்யம் கல்பிக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு திரவ்ய சுத்திமுறை சொல்லப்படுகிறது. சாமான்யமாக சிராத்தவிதி விளக்கப்படுகிறது. முதலில் கால் அலம்பும் முறை பின்பு ஆசமனம் செய்த பிறகு சுத்தமான ஆசனத்தில் அமரச் செய்தல் என்ற முறை அவர்களிடம் சிராத்தம் செய்கிறேன் என்ற பிரார்த்தனை. சிராத்தம் செய்யுங்கள் என்று அவர்களிடம் இருந்து உத்தரவு பெற்று. அவர்களுக்கு தர்பாசனம் கொடுத்து ஆவாஹனம் செய்து சிராத்தரøக்ஷக்காக யவையை தூவி அர்க்யம் கொடுப்பது. போன்ற முறை விளக்கப்படுகின்றன. பிறகு சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆகிய உபசார விதியும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பவித்ரம் வஸ்திரம் மோதிரம் இவைகளை ஆதரவுடன் கொடுக்கவும் பிறகு ஆவாஹனம் முதலியவைகள் கூறப்பட்டு விஸ்வேதேவர்கள் விஷயத்தில் செய்யவேண்டிய எல்லா கிரியையகளும் வலமாகவே, செய்யவும் என அறிவித்து பிதுர்க்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கிரியைகளும் எவ்வாறு செய்ய வேண்டும் என முறைப்படி விளக்கப்படுகிறது.

பிறகு போஜனபாத்திரம் தயார் செய்யும் முறை பிறகு எல்லா சமயல் செய்த பொருளும் சுத்தி செய்வதன் பொருட்டு சிவாக்னியில் நான் ஹோமம் செய்கிறேன் என்று பிராம்ணர்களை கேட்டு, பிறகு செய் என்று. அனுமதி பெற்று ஹோமம் செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோமம் முறை நிரூபிக்கப்படுகிறது ஹோமம் செய்து. மீதியான அன்னத்தை பிதுர்களுக்காகவும், பிண்டத்திற்காகவும் கொடுக்கவும், விஸ்வே தேவர்குக்கு ஹோம சேஷத்தை போடக் கூடாது என கூறப்படுகிறது. பிறகு வரிக்கப்பட்ட பிராம்ணர்களின் போஜன விதி கூறப்படுகிறது. அங்கு ஆபோசனத்திற்காக, முதலில், ஈசான மந்திரத்தினால் பிராம்ணர்களின் கையில் போட்டு, உங்கள் சவுகர்யப்படி சாப்பிடுங்கள் என கூறி அவர்களும் மவுனமாக இருந்து சாப்பிடவும் என கூறப்படுகிறது. பிராம்ணர்கள் சாப்பிடும் காலத்தில் அதிதி வந்தால் அவரை விஜாரிக்காமல் சக்திக்கேற்றவாறு போஜனம் செய்விக்கவும் என கூறப்படுகிறது. ஸ்வாமி, அம்பாள், ஸ்கந்தன், மஹா விஷ்ணு, சாக்ஷõத்காரமான, தர்மன் இவர்கள் அதிதி ரூபமாக சஞ்சரிக்கிறார்கள் ஆகையால் அவர்களை விசாரிக்க வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது. ஸ்ரரத்த கர்த்தா பிராம்ணர்கள் திருப்தியாக சாப்பிடும் வரை வடக்கு முகமாக இருந்து கொண்டு ஈசான மந்திரத்தை ஜபித்துக்கொண்டு நிற்க்கவும் என கூறப்படுகிறது. அவர்கள் போஜனம் செய்த பிறகு முடிவில் சிறிது அன்னத்தை எடுத்து நீங்கள் திருப்தி அடைந்தீர்களா என்று கேட்டு அவர்களால் திருப்தி அடைந்தோம் என்று கூறப்பட்ட பிறகு அந்த அன்னத்தை பூமியில் போட்டு விடவும். பிறகு எச்சில் இடப்பட்ட இலைக்கு நேராக பிண்டவிதியானது கூறப்படுகிறது. பிறகு போஜனம் செய்த பிராமணர்களை சந்தனம், புஷ்பம், முதலியவைகளால் பூஜை செய்து நமஸ்கரித்து மன்னிக்கவும் என கேட்டு அவர்களை க்ஷமாபிரார்த்தனை செய்யவும்.

பிறகு அவர்களுக்கு ஆசமனம் செய்விக்கவும் அவர்களுக்கு தாம்பூல சஹிதமாக தட்சிணை கொடுக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு திருப்தியின் பொருட்டு வீட்டுக்கு உபயோகமாக பசு மாடு, பூமி, தாசிகள், இவைகள் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஸ்ரார்த்த கர்த்தா கேட்க்க வேண்டிய சொற்களும் அதற்கு பதில் சொல்வாதாக சாபிட்டவர்களால் சொல்ல வேண்டியவைகளும் முறைப்படி கூறப்படுகின்றன. பிறகு இங்கு அன்னசேஷங்களை என்ன செய்ய வேண்டும் என கேட்டு அவர்கள் பந்து ஜனங்களுடன் கூடி சாப்பிடவும் என கூறவும் என்று கூறப்படுகிறது. சிராத்த கர்த்தா சாப்பிட்ட பிராம்ணர்களை பிதுர்சப்த பூர்வமாக யதாஸ்தானம் செய்யவும். பிறகு பிண்டங்களை பிராம்ணர்களுக்கோ பசுக்களுக்கோ, அல்லது அக்னியிலோ, ஜலத்திலோ போட்டு விடவும். இங்கு மத்தியில் உள்ள பிண்டத்தை குலபத்தீனி, நன்கு சாப்பிட்டால் அவளுக்கு நல்ல அழகுடன் கூடியிருக்கும், நல்ல தைர்யசாலியும், புகழை உடையவனும் ஆன புத்திரன் உண்டாகிறான் என்பது கூறப்படுகிறது. பிறகு விருத்தி சிராத்தம் நித்ய, சிராத்தம், நவசிராத்தம், ஏகோத்திஷ்ட சிராத்தம் சபிண்டீகரண சிராத்தம் இவைகளின் விதிமுறை. மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்ராத்தம் செய்பவனுக்கு எல்லா விருப்பபூர்த்தியையும் கிடைக்கிறது. ஸ்ராத்த கர்த்தாவானவன் அழக்கூடாது என கூறப்படுகிறது. பிறகு விபத்தை அடைந்தவனை குறித்து ஸ்ராத்தம் செய்யும் விஷயத்தில் அதிகாரிகள் நிரூபிக்கப்படுகின்றன அங்கு புத்திரன் இல்லாத சமயத்திலும் உபநயனம் ஆக சமயத்திலும் தீட்சை செய்யப்படாத போதிலும் இறந்தவரின் சஹோதரன் ஸ்ரார்த்த கர்மாவில் யோக்யன் என்று கூறப்படுகிறது. சவுச சம்ஸ்காரம் செய்யப்பட்டவன் பிண்டதானம் செய்யும் விஷயத்திலும் யோக்யன் ஆகிறான். அந்த புத்திரன் வேத மந்திரம் இன்றி ஸ்வதா காரத்தினாலே உபயோகிக்கப்பட்டு மந்திரம் சொல்ல வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஒரு வேஷ்டியுடன் சாப்பிடக்கூடாது தேவதைகளின் பூஜையும் செய்யக் கூடாது. சிராத்தாலத்திலும் அவிஸ் கொடுக்கும் பொழுதும் பூஜிக்கும். பொழுதும் பார்பதற்கு யோக்யம் இல்லாத சண்டாளன் முதலியவர்களை நிரூபிக்கிறார். பிறகு, குதபகாலம் என்ற கால அளவை நிரூபிக்கிறார். பிறகு 9 விதமான குதபகாலம் பற்றி நிரூபிக்கப்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு பெண் தன்னுடைய கோத்திரத்திலிருந்து விடுபடுகிறாள் அவளுடைய கணவன் கோத்திரத்தினாலே பிண்டம், ஜலதர்பணம் முதலியவை செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. ஆசுரம் முதலிய பெயர் உள்ள விவாக விஷயத்தில் சில கார்யங்கள் செய்ய வேண்டும் என கூறி அந்தவிசேஷ கார்யம் விளக்கப்படுகிறது. இவ்வாறாக 29வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தீக்ஷி தாத்மாக்களுக்கு லேசாக சிராத்தவிதி கூறப்படுகிறது. அந்த சிராத்தமானது நித்யம், நைமித்திகம், காம்யம், வ்ருத்தி, பார்வணம் என்பதாக

2. ஐந்து விதமாக கூறப்பட்டது. இவ்வாறான சிராத்தத்தை அறிந்து சிராத்தகர்மாவை அனுஷ்டிக்கவும். தினந்தோறும் செய்வது நித்ய சிராத்தம். இறந்த தினத்தில் செய்வது நைமித்திகம்.

3. பொதுவாக விருப்பத்திற்காக செய்வது காம்யசிராத்தம். அமாவாசையில் செய்வது பார்வண சிராத்தம் விவாஹாதி சுப தினத்தில் செய்வது வ்ருத்தி சிராத்தம் இவ்வாறாக ஐந்து வித சிராத்தமாகும்.

4. சிராத்த தினத்தன்று சிரத்தையோடு போஜனாதிகளை கொடுப்பது சிராத்தம் எனப்படும். ஆசவுச சுத்தியானது தினம் முதல் மாசம் வர்ஷாதி பேதமாக

5. இறந்த ஸம்வத்ஸரத்தில் பிரதி தினமும் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும். ஓர் வருட முடிவில் சிராத்த பக்ஷத்தில் சிராத்தம் செயற்பாலது.

6. நவசிராத்தம் முதலிலும், பிறகு சோடஸ சிராத்தத்தையும் செய்ய வேண்டும். நான்காவது, ஐந்தாவது, ஒன்பதாவது, பதினொன்றாவது தினங்களில்

7. இறந்தவரை உத்தேசித்து எந்த தானம் செய்யப்படுகிறதோ அது நவசிராத்தமாகும். நவசிராத்தம் மந்த்ரரஹிதமாகவும் பிண்ட திலோதக விவர்ஜிதமுமாகும்.

8. உதகமின்றியும் தூபமின்றியும் கந்தமால்ய விவர்ஜிதமாகவும் செய்யவும். ஆசவுச தீண்டலுக்கு முடிவில் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும்.

9. பதினோராவது தினம் நாற்பத்தி ஐந்தாவது தினம், பிரதி மாஸ திதி, ஆறாம் மாசம் வர்ஷ முடிவிலும் ஆக எந்த கர்மா செய்யப்படுகிறதோ

10. அது ÷ஷாடச சிராத்தமாகும். இந்த தினங்களில் எந்த தானங்கள் செய்யப்படுகிறதோ அது ÷ஷாடச சிராத்தமென்றும் ஏகோத்திஷ்ட சிராத்த மென்றும் பெயராகும்.

11. யாருக்கு இந்த நவசிராத்த ÷ஷாடச சிராத்தங்கள் செய்யவில்லையோ அவருக்கு 100 சிராத்தங்கள் செய்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு பிசாசதன்மை ஏற்படுகிறது.

12. வாசற்படியிலும், விபூதியிலும் ஆகாசத்திலும் முறையாக மும்மூன்று தினமாக பிரேத பூதமாக ம்ருதமானவர் நிற்கிறார்.

13. அவன் ஸ்பிண்டீகரணத்திற்கு பிறகு சிவ லோகத்தை அடைகிறான். மரணமடைந்த தினத்திலிருந்து வர்ஷம் முடியும் வரை பிரதி தினமும்

14. போஜனமும் சோதகும்பமும் தேசிகருக்கு கொடுக்க வேண்டும். பிறகு நவசிராத்தம் ஏகோத்திஷ்ட சிராத்தமும் செய்து

15. ஸோத கும்ப சிராத்த ஸஹிதமாக ஸ்பிண்டீகரண சிராத்தம் செய்ய வேண்டும். பிரம்மசர்யானுஷ்டானத்துடன் சிராத்தாதிகள் செய்ய வேண்டும்.

16. ஆறு மாத முடிவிலோ, மூன்று மாத முடிவிலோ ஒரு மாத முடிவிலோ ஏகோத்திஷ்ட சிராத்தத்தின் இரண்டாம் நாளிலோ ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும்.

17. யாருக்கு ஒருவர்ஷ முடிவிற்குள் ஸ்பிண்டீ கரண சிராத்தம் செய்யப்படுகிறதோ, அவனுக்கும் ஓர் வருட முடிவு வரை போஜனம் சோத கும்பத்துடன் சிராத்தம் செய்ய வேண்டும்.

18. முன்னதாகவே நவசிராத்த ஏகோத்திஷ்ட சிராத்தத்துடன் ஒரு நபர் அதிகமான போஜனத்துடன் ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும்.

19. எல்லோரும் சேர்ந்து தேசிகருக்கு விசேஷமாக போஜனம் செய்யவிக்கவும். சிவனுக்கோ அல்லது தீக்ஷிதருக்கோ பிண்டீகரணம் கொடுக்க வேண்டும்.

20. வைச்யர்களுக்கு பக்ஷசிராத்தமானது ஏகோத்திஷ்டசிராத்த முடிவிலாகும். பதினைந்தாம் தின சிராத்தம் மாஸிக சிராத்தமும் சூத்ரர்களுக்கும் அவ்வாறே ஆகும்.

21. மற்ற எல்லாம் பிராம்மணாதி மூன்று வர்ணத்தவர்களுக்கும் பொதுவானதாகும். சூர்யன் கும்பராசி, கன்யாராசியா அடைந்த கிருஷ்ணபக்ஷத்திலும் (மாசி, புரட்டாசி மாதம்)

22. சதுர்த்தி, சப்தமீ நவமீ, த்ரயோதசியிலும் மகாநக்ஷத்திரத்திலும் அமாவாஸ்யையிலும் பித்ரு பக்ஷமாக கல்பிக்க வேண்டும்.

23. அஷ்டமியிலும் மீதமான பர்வதிதிகளும் மாத்ருவர்க்கமாக கல்பிக்கவும். வ்யதி பாதம் அயன காலம், ஸந்த்க்ராந்தி காலத்திலும்

24. விஷுவ புண்யகாலம், கஜச்சாயை, ஸங்கிராந்தி காலத்திலும் செய்யவும். சஸ்திரம் அக்னி, இடி மின்னலேற்பட்ட ஸமயத்திலும் பிரளயகாலத்திலும் மரித்தவர்களுக்கு

25. மேற்கூறிய உபாதி காலத்தில் மரித்தவர்களின் திருப்திக்கு சதுர்த்தசியில் சிராத்தம் செய்யவும். வேறு விதமாக ஸம்பவித்தால் வசு, ருத்ராதித்ய பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.

26. ராத்ரியில் இரண்டு சந்த்யாகாலத்திலும், ராக்ஷஸ சிராத்தம் செய்யவும். கிரஹண காலமாக இருப்பின் ராத்ரியிலும் சிராத்தம் செய்யலாம்.

27. புத்ரவானான கிருஹஸ்தன் விசேஷமாக திரயோதசி சிராத்தம் செய்யக் கூடாது. மகநக்ஷத்திரத்தில் (மகத்தில்) ஸ்ராத்தம் செய்பவனுக்கு ஜ்யேஷ்ட புத்ரன் அழிவடைகிறான்.

28. மனைவியும், புத்ரனும் நந்தையிலும் சதுர்தசியிலும் நவசிரார்த்தம் செய்தால் மூன்று ஜன்மத்திலும் குலத்தின் அழிவு ஏற்படும்.

29. வெள்ளி, புதன், வியாழன், திங்கட் கிழமை ஆகிய தினங்களில் சிராத்தம் செய்தால் கர்த்தாவானவன் மரணமடைவான்.

30. ரேவதி, புனர்வசு, விசாகம், ரோஹிணி, உத்திரம், உத்ராடம், உத்ரட்டாதி, தன்னுடைய ஜன்ம அனுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்திரத்திலும் தன்னுடைய இருபத்தி நான்காவது நக்ஷத்ரமும்

31. இருபத்தி ஏழாவது நக்ஷத்திரத்திலும், சிராத்தகர்மாவை வர்ஜிக்கவும். இந்த நக்ஷத்திரங்களில் சிராத்தம் செய்தால் செய்பவன் மரணத்தை அடைவான்.

32. இரண்டு அமாவாசை ஓர் மாதத்தில் வந்தால் அந்த மாதம், மலினம், பாபஸம்பவம் என்றும் பித்ரு, தேவர்களால் ஒதுக்கப்பட்டதுமாகும். எல்லா கர்மாவிலும் த்யாஜ்யம் செய்யவும்.

33. மலினமான மாதத்தில் நித்ய நைமித்திக கிரியைகளை முயற்சியுடன் செய்யவும். (விசாகமாச) சுக்லபக்ஷ த்ருதீயையிலும் கார்த்திகை மாத சுக்லபக்ஷ

34. நவமியிலும் புரட்டாசி மாச அமாவாஸ்யையிலும், அதே கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதியிலும் மாசி மாத அமாவாஸ்யை (பவுர்ணமியிலும்)

35. மூன்று அஷ்டகா திதியிலும் அயனகாலம், சூர்யசந்திர கிரஹணத்திலும் ஆகிய இந்த காலங்களில் திலோதகம் கொடுக்க வேண்டும்.

36. மேற்கூறிய அந்த காலங்களில் செய்யும் சிராத்தம் ஆயிரம் அமாவாஸ்யை சிராத்தபலனை சந்தேகமின்றி அடைகிறான். சூர்யன் கன்யா ராசியை அடையும் போது பித்ருக்கள் புத்திரர்களை அடைகிறார்கள்.

37. பிறகு வ்ருச்சிக ராசியை அடைந்தபோது பித்ருக்கள் ஆசையில்லாதவராக சென்று விடுகிறார்கள். மாளய பக்ஷ மாதத்தில் சிராத்தாதிகள் செய்யவில்லை எனில் பித்ருக்கள் கடுமையான சாபத்தை கொடுக்கிறார்கள்.

38. மேற்கூறிய சிராத்தம் செய்யாதவன் சேற்றில் பசு மாடு நுழைந்தது போலாகிறான். புத்ரனை அடைந்தும் பிப்பல மரத்தில் கிளி, பறவை போலும் ஆகிறான்.

39. மது, மாம்ஸங்கள், அன்னபாகம், பால், பாயஸம், இவைகளால் வர்ஷருதுவிலும் வர்ஷங்களிலும் மாசி மாதத்திலும் நமக்கு கொடுக்கிறவனாகிறான். பயன் மேலே கூறப்பட்டுள்ளது.

40. முற்பகலில் தெய்வீக சிராத்தமும் பிற்பகலில் பித்ருசிராத்தமும் ஏகோத்திஷ்டம் மாத்யா ஹ்னிகத்திலும் காலையில் விருத்தி நிமித்த சிராத்தமும் செய்ய வேண்டும்.

41. சுக்லபக்ஷத்தில் முற்பகலிலும் கிருஷ்ண பக்ஷத்தில் பிற்பகலிலும் சிராத்தம் ஆகும். முற்பகலில் ஆமசிராத்தம் செய்ய வேண்டும்.

42. ஆபத்து ஸமயத்திலும் அக்னி இல்லாத ஸமயத்திலும் புண்யதீர்த்தத்திலும் சந்திர, சூர்ய கிரஹண காலங்களில் அசக்தர்கள் ஆமசிராத்தம் செய்ய வேண்டும். சூத்ரர்கள் முதலியவர்களோவெனில் எப்பொழுதுமே ஆமசிராத்தம் செய்ய வேண்டும்.

43. சிராத்த விஷயத்தில் த்விஜோத்தமர்கள் யாவரும் பிரசஸ்தர்கள் ஆவார். தன் ஜாதியிலிருந்து மேற்பட்டவர்களையோ தன்னுடைய ஜாதியர்களையோ கிரஹிக்க வேண்டும்.

44. ஆசார்ய லக்ஷணத்தில் கூறப்பட்டுள்ள லக்ஷணமுள்ளவர்களும் நிந்திதர்கள் இல்லை. தெய்வீக கர்மாவில் தர்மக்ஞனை ஏற்பது போல் பிராம்மணனை பரிக்ஷிக்கக் கூடாது.

45. பித்ருகர்மா ஏற்படும் போது முயற்சியோடு பரிக்ஷிக்கவும். எது உபகாரயுக்தமாக தானம் செய்யப்பட்டதோ அது ஸாத்விகமாகும்.

46. மகிழ்ச்சியான மனதால் சிவஞான வித்வானுக்கும், அதிகம் படித்தவனுக்கும் தரித்ரனுக்கும் எந்த தானம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமாகும்.

47. பூர்வோபகாரியான சிவசாஸ்திரமில்லாதவருக்கு, ஸம்ருத்திக்காக எந்த தானம் செய்யப்பட்டதோ அது ராஜஸமாகும்.

48. ஸம்பந்திக்கும், விரதமில்லாதவனுக்கும் பயனை விரும்புபவர்களால் எந்த தானம் செய்யப்படுகிறதோ அது ராஜஸ தானமாகும்.

49. சிவார்ச்சனை முதலான கிரியை யில்லாதவர்க்கும் சிவஞானத்தை அபகரிப்பவர்க்கும் திருடனுக்கும் கொடுக்க படுகிற தானம் தாமஸமெனப்படும்.

50. ரோஷத்துடன் அபஸவ்யமாகவும் அறியாமையாலும் எவர்களால் சேவகனுக்கும் தானம் செய்யப்படுகிறதோ அது தாமஸமாகும்.

51. இவ்வாறு கல்பவிதி கூறப்பட்டு அனுகல்யம் கூறப்படுகிறது. தாய்வழி தாத்தா, மாமா மைத்துனர், ஸகோதரியின் பிள்ளை (மருமகன்) மாமனார் குரு

52. பேரன் (பெண்வயிற்று பேரன்) மாப்பிள்ளை பந்துஜனம், ருத்விகாதிகளையும் வரிக்கவும். வ்ரதஸ்தாயிருந்தாலும் தவுஹித்ரனை, சிராத்தத்தில் முயற்சியோடு போஜனம் செய்விக்க வேண்டும்.

53.மேற்கூறியவர்கள் கிடைக்காமலிருப்பின் பிக்ஷúக்களுக்கும், பிரம்மசாரிக்கும் போஜனம் செய்விக்கவும். தான் சிராத்தம் செய்துவிட்டு வேறு சிராத்தத்தில் மோஹத்துடன் புசிப்பவனுக்கு

54. அவனுடைய பித்ருக்கள் பிண்டோதக கிரியைகளை ஏற்று கொள்ளாமல் நழுவி விடுகிறார்கள். மறுபடியும் உணவருந்துதல், வழி நடைப்பயணம், காவல் காப்பது, அத்யயனம், மனைவியுடன் புணர்தல்;

55. தானம் ப்ரதிக்ரஹம், ஹோமம், சிராத்த போஜனம் இந்த எட்டும் சிராத்த காலத்தில் வர்ஜிக்கவும். சிராத்தத்திற்காக யார் வரித்து விட்டு கொடுக்கவில்லையோ

56. அவனிடம் மன்னிக்கும்படி பிரார்த்திக்கவும். இல்லையேல் கர்த்தா ரவுரவ நகரத்தை அடைகிறான். சிரார்த்தத்திற்காக நமஸ்கரித்து சிராத்தம் செய்யும் போது ஸ்ரார்த்தத்தில் யார் சாப்பிடவில்லையோ

57. அவன் சந்தேகமின்றி கும்பீபாக நரகத்தை அடைகிறான். சிராத்தத்தில் சவுசம் (சுத்தம்) கோபமின்மை சீக்ரமில்லாமை ஆகிய மூன்றும் விசேஷமாகும்.

58. சிராத்தத்தில் நல்ல தர்பம் நெய், திலம் ஆகிய மூன்றும் நல்ல பவித்ரங்களாகும். கடலுப்பும் மனதிலுதித்த நல்ல ஸம்பவமுமாகிய

59. இந்த இரண்டும் பரம பவித்ரமான ப்ரத்யக்ஷமான த்ரவ்யமாகும். பெருங்காயம், பச்சை காய்கறிகளும் சிறந்ததாகும்.

60. சிறிதேனும் க்ருஹத்தில் பக்ஷ்யம் போஜ்ய வஸ்துவையோ தயாரித்தல் பிண்டத்தின் பொருட்டு நிவேதிக்காமல் சாப்பிடக்கூடாது.

61. வரகு, உப்பு, நாவல்பழம், பூஷணி வகை, சுரைக்காய், கத்தரிக்காய், எருமை பாலும்

62. கொய்யாப்பழம், உளுந்து வகை, மிளகு திப்பிலி, தயாரிக்கப்பட்ட உப்பு, மூங்கிற் கொழுந்து இவைகளை எல்லாம் வர்ஜிக்க வேண்டும்.

63. சிகப்பு பொருள்களும், குங்குமமும், சிகப்பு சாம்பிராணி, நேரிடையாய் சேர்க்கப்படும் உப்பு இவைகள் யாவும் தள்ளத்தக்கதாகும்.

64. குப்பையில் இருப்பதும், பாத ஸ்பர்சிதம், வெண்மையானதும், மீதமானதும், புண்ணாக்கும், கடைந்ததையும், அதிக லவணமானதையும் தள்ளவும்.

65. எவர்கள் ஸ்நேகத்தால் உப்பு, காய்கறிகளை கையால் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்த பயனில்லை. புசிப்பவன் பாபத்தை அனுபவிக்கிறான்.

66. கட்டைவிரலின்றி எந்த சிராத்தம் செய்யப்படுகிறதோ வெளிக்கொணர்ந்த முழங்காலுடன் எந்த ஹோமம் செய்யப்படுகிறதோ முழந்தாள் வெளிப்புறமாக கையை சேர்ந்ததாக செய்யப்படும் கர்மாவும் ஆஸுரமாகும்.

67. தானம், தானம் பெற்றுக்கொள்ளுதல் ஹோமம் போஜனம் பலி ஆகிய கர்மாக்கள் கட்டைவிரல் ஸஹிதமாக செய்ய வேண்டும். இல்லையெனில் ஆசுரகர்மாவாகும்.

68. விசேஷமாக உள்ளடங்கிய முழந்தாளுடன் ஆசமனம் செய்யவும். முற்பகலில் சேகரிக்கப்பட்ட தர்ப்பை பவித்ரம், ஹவிஸ்ஸுக்கள் எல்லாம் எப்பொழுதும் விசேஷமாகும்.

69. எந்த பொருட்கள் சிராத்தத்தில் விஹிதமோ அவைகளை உபயோகிக்கவும். தெய்வாராதனையில் மாம்ஸம் வர்ஜ்யம் மாம்ஸம் சேர்க்கப்பட்டிருந்தால் பசுரோம எண்ணிக்கை காலம் நரகமனுபவிப்பான்.

70. சிரோவஸ்திரத்துடன் கூடியதாக போஜனம், தெற்கு முக போஜனம் செய்வித்தல் வாசற்படியில் அமர்ந்தவனாகவும் யார் புசிக்கிறானோ அவனை ராக்ஷஸர்கள் புசிக்கிறார்கள்.

71. ம்ருத்பாத்திரத்தில் சிராத்த காலத்தில் பித்ருக்களை போஜனம் செய்விப்பவன் தேசிகனுடன் அன்னதாதா, புசிப்பவன் யாவரும் நரகத்தை அடைவான்.

72. மண்ணுடன் கூடியதீர்த்தத்தால் பிரோக்ஷணம் விசேஷமாக கூறப்படுகிறது. சிராத்த காலத்தில் கர்மாதிகாரி நாபிக்கு கீழ் தொட்டுக் கொள்ளக்கூடாது.

73. ஆயுள், புத்ரன், தனம், ப்ரக்ஞை, சவுபாக்யம், அதிக கீர்த்தி, நண்பர்கள் ஆரோக்யம் சம்பத், இவைகள் நிந்திக்கப்படாத சிராத்தத்தால் கிடைக்கிறது.

74. நித்யானுஷ்டமான லோபம், மனஸ்தாபம், நண்பநாசம், குறைந்த செல்வம் கலஹம் (வசித்தலின்மை) இவைகள் நிந்திதமான சிராத்தத்தால் கிடைக்கிறது.

75. சிராத்த கர்மாவில் பவுதிகனும் பிரம்ம சாரியும், சிரேஷ்டர்கள் ஆகிறார்கள். சைவரும் ஸாந்தானிகரும் பித்ரு தேவர்களுக்கு யோக்யமாவர்.

76. எந்த புருஷன் நைஷ்டிகனை அதிதியாக அடைந்து ஸேவிக்கிறானோ அவன் மஹாத்மாக்களான சதுர்வேதார்த்த ஞானமுள்ள ப்ராம்மணர்களின் ஆசியை அடைகிறான்.

77. ஆசார்யன் பிராமணனாக வரிக்கப்பட்டு புசித்தால் கர்தாகோடி நன்மையை யடைகிறான். ஸாதகன் போஜனம் செய்தால் லக்ஷ பலனும் தீக்ஷிதன் புசித்தால் பத்தாயிரம் பலனுமாகும்.

78. ஸமயஸ்தன் அதிதியானால் ஆயிரம் பலனும் மாஹேச்வர புருஷனால் நூறுபலனும் ஆகும். விச்வே தேவனுக்காக இரண்டு ஸாதகனையும் பித்ருக்களுக்கு மூன்று தேசிகர்களையும் கல்பிக்க வேண்டும்.

79. சிராத்த விஷயத்தில் எல்லாவிடத்திலும் எப்பொழுதும் ஐவரும் கிடைத்தால் சம்மதிக்கப்படுகிறார்கள். சைவசிரார்த்தத்தில் ஈசன் ஸதாசிவன், சாந்தன் என கூறப்படுகிறார்கள்.

80. ருத்ரன் அனந்தன், என்று விச்வேதேவர்களாக கூறப்படுகிறார்கள். தீக்ஷிதர்களின் விஷயத்தில் மேற்கூறியவர்கள் சொல்லப்பட்டு அவர்கள் ருத்ராம்சர்களுக்காக கூறப்படுகிறது.

81. ஸ்கந்தர், சண்டேசர், கணேசன் என்று பித்ருக்களுக்கு மூன்று பேர் கூறப்படுகிறார்கள். அதில் நந்தி, மஹாகாளர் இருவரும் விச்வேதேவ கணமாகும்.

82. திருப்தியடைந்த மேற்கூறியவர்களால் எல்லாம் சிவானந்த திருப்தியாக பூமியில் ஆகிறது. ஐந்து பேர் கிடைக்காமல் இருக்கும் பக்ஷத்தில் இரண்டு பேரையாவது கல்பிக்கவும்.

83. பாஹுமூல சிரஸ்தானத்தில் மூன்று பேர்களை கல்பிக்கவும். ஓரிடத்திலும் வேறு இடத்திலுமாக இரண்டு ஸ்தானமாக இருவரை கல்பிக்க வேண்டும்.

84. ஓரிடத்தில் பாஹுயுக்மமாகி இருவரையோ ஐவரையோ கல்பிக்கவும். க்ருஹஸ்தர்களுக்கு ஆறு தெய்வதமாகவும் லிங்கிகளுக்கு மூன்று தெய்வமாகவும் கல்பிக்க வேண்டும்.

85. இவ்வாறாக எண்ணி சிரார்த்த கர்மாவை செய்யவும். முதல் நாளே வயதானவர்களை அழைக்க வேண்டும்.

86. துளிர் போன்ற கையால் வ்ருத்தர்களின் முழந்தாளை ஸ்பர்சித்து பிரியமான வார்த்தைகளை கூறி அவர்களை ஆச்வாஸப்படுத்த வேண்டும்.

87. சிராத்தம் செய்கிற ஆசார்யன் அழைத்தவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து பரமேஸ்வரனை ஸ்மரித்தவனாக ராத்ரியில் அவர்களை வசிக்கச் சொல்ல வேண்டும்.

88. அவர்களின் கடாக்ஷத்தால் அனுக்ரஹிக்கப்பட்டவனாக இந்திரியங்களை அடக்கி உறங்க வேண்டும். மறுதினம் ஸ்நானம் பூஜை முதலிய கார்யங்களை முடித்து

89. அபராஹ்னத்தில் ஸ்நானாதி கர்மாக்களை செய்து தன்னால் அழைத்தவர்களுக்கு ஆஸனாதிகளை கொடுத்து ஸ்வாகதார்க்யம் கொடுத்து

90. கால் அலம்புவதற்காக மண்டலாதிகளை செய்ய வேண்டும். க்ருஹமுற்றத்தில் ஸமமாக பசுஞ்சாண ஜலத்தால் மெழுகி பூச வேண்டும்

91. ஸமமான ரேகைகளால் கோடிட்ட பதத்தில் இரண்டு சதுரமான மண்டலம், கிழக்கு பக்கமும் மேற்கில் இரண்டுவட்டமான மண்டலமும்

92. தெற்கு வடக்காக முழங்கை அளவுள்ளதாகி நடுவில் மண்டலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலங்களில் பன்னிரண்டு அங்குலம் குழி செய்ய வேண்டும்.

93. மாத்ரு சிராத்தம் பித்ருசிராத்தத்தில் மண்டலம் அல்லது குழி அமைக்க வேண்டும். பித்ருக்களுக்காக ஐந்து பாத்திரத்தில் அர்க்யம் கல்பிக்க வேண்டும்.

94. சந்தனம் புஷ்பம், தர்பைநுனி தீர்த்தத்தால் வித்யாங்க ப்ரம்மமந்திரஸஹிதமாக தேவார்க்யத்திற்கு யவையுடனாகவும், பித்ரு அர்க்யத்திற்கு எள்ளுடனும் கல்பிக்க வேண்டும்.

95. வித்யா அங்க மந்திரங்களால் தீர்த்தத்தால் பிரோக்ஷித்தும் அபிமந்திரிக்க வேண்டும். தத்புருஷ மந்திரத்தால் வஸ்திரங்களையும் ஹ்ருதய மந்திரத்தால் சந்தனமும்

96. பிரம்ம மந்திர சிரோமந்திரத்தால் புஷ்பங்களையும் சிகா மந்திரத்தால் தூபதீபமும் கூறப்படாத மற்ற சிராத்தாங்கங்களை ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.

97. இவ்வாறு திரவ்ய சுத்தி செய்து சிராத்த கர்மாவை செய்ய வேண்டும். தர்பை நுனியுடன் அவகீரணம் செய்து யவை, திலங்களையும் தெளித்து

98. குறுக்கு மத்தியில் குசங்களை வைத்து தெற்கே மண்ணுருண்டையை வைக்க வேண்டும். வித்யா அங்க அஸ்திர மந்திரத்தால் தெற்கிலுள்ள சதுரச்ர மண்டலத்தை அர்சிக்க வேண்டும்.

99. வாஸனையுள்ள வெள்ளை புஷ்பங்களாலும் அர்ச்சிக்க வேண்டும். வித்யா. அங்க, ஹ்ருதய மந்திரத்தால் பிரணவாதியால் அந்தந்த பெயரால் வடக்கு முகமாக இருந்து கொண்டு செய்யவேண்டும்.

100. ப்ராசீனா விதமாக ஸ்வாஹாந்தமாக பச்சிம மண்டலத்தில் கையின் பின்புறமாக ஸ்வதாந்தமாக அர்ச்சிக்க வேண்டும்.

101. ஒவ்வொரு பாத்திரத்திலிருந்து தனித்தனியாக எடுத்து அர்க்யத்தை பாதத்தில் விட வேண்டும். அர்க்யம் கொடுத்து மண்ணை எடுத்து சீக்கிரமாக பாத பரக்ஷõலனம் செய்ய வேண்டும்.

102. வடக்கு மண்டலத்திலும் இவ்வாறு காலலம்பி குளிர்ந்தஜலத்தால் ஆசமனம் செய்வித்து தேவபித்ருக்களுடன் தானும் ஆசமனம் செய்து நுழைந்து

103. தக்ஷிண பாகத்தில் மெழுகப்பட்ட சுத்தமான பிரணவாசனத்தில் சுத்தமான காய்ந்த தேசத்தில் அவர்களை அமர்த்த வேண்டும்.

104. பிறகு சிரார்த்தம் செய்யப் போகிறேன் என்று அவர்களை பிரார்த்திக்கவும் பின்பு சிரார்த்தத்தை செய் என்ற உத்தரவை ஏற்றவனாக இரண்டு பேருக்கு தர்ப்பாஸனம் கொடுக்க வேண்டும்.

105. பித்ருக்களுக்கு கையில் தர்ப்பம் ஆஸனமாக தரக்கூடாது. விச்வே தேவர்களுக்கு  ஸத்யோஜாத மந்திரத்தால் வடக்கு நுனியாகவும் ஸவ்யமாகவும் கொடுக்க வேண்டும்.

106. ஆவாஹிக்கிறேன் என்று கூறி அவர்கள் நீ ஆவாஹிக்கவும் என்று உத்தரவு ஏற்றவனாய் அந்த பெயரை ஓங்காரத்துடன் ஆவாஹித்து

107. வாமதேவ மந்திரத்தால் ஸ்தாபனாதி த்ரயம் செய்து, பிறகு ரக்ஷõர்த்தமாக யவைகளை போட வேண்டும்.

108. பிரதக்ஷிணம் செய்து அர்க்யம் கையில் கொடுத்து இருவர்களுக்கு தனித்தனியாக அகோர மந்திரத்தால்

109. விச்வேதேவார்க்யத்தை பாத்திரத்தில் ஏற்று கீழே வைத்து முழங்கால் மடித்து அமர்ந்து அகோர மந்திரத்தால் யவைகளை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

110. விச்வதேவ அங்க பாதங்களை ஆதரவுடன் பிடித்து விட்டு ஸர்வாங்கமும் கந்தம் பூசி புஷ்பமாலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

111. வாமதேவ மந்திரத்தால் தூபமும், அகோர மந்திரத்தால் தீபமும் ஈசான மந்திரத்தால் பவித்ரமும் கொடுக்க வேண்டும்.

112. கவச மந்திரத்தால் வஸ்திரம் மோதிரம் இவைகளை ஆதரவுடன் கொடுத்து அதன் அங்கமாக உபவீதமும் கொடுக்க வேண்டும்.

113. பித்ருக்களுக்கு அபஸவ்யமாக அப்ரத்க்ஷிணம் செய்து இருமடங்காக தர்ப்பைகளை ஸத்யோ ஜாத மந்திரத்தால் கொடுத்து

114. ஆவாஹனத்திற்கு அனுமதி பெற்று அவாஹித்து பித்ருக்களை அந்தந்த மந்திரங்களை ஸ்மரித்து ஸ்தாபனாதி த்ரயம் செய்து வாமதேவ மந்திரத்தால் அப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

115. ரக்ஷõர்த்தமாக ஈசான மந்திரத்தால் திலம் போட்டு திரும்ப வேண்டும். அர்க்யம் மூவர்களின் ஸன்னிதானத்திற்கு அகோர மந்திரத்தால் அஞ்சலி ஹஸ்தத்தில் கொடுக்க வேண்டும்.

116. முன்பு போல் ஏற்றுக் கொள்வதற்காக அஞ்சலியில் ஸ்தாபித்து மண்டியிட்ட பாவனையால் ஈசான மந்திரத்தால் சிரசுமுதல் முறையாக

117. திலங்களால் அர்ச்சித்து வாமதேவ மந்திரத்தை ஸ்மரித்து கந்தாதிகளை கொடுத்து அகோர மந்திரத்தால் தூபதீபம் கொடுக்க வேண்டும்.

118. ஈசான மந்திரத்தால் பவித்ராதிகளை அபஸவ்யமாகவும் ஸ்வதாந்தமாகவும் அர்பணித்து கர்த்தா பூர்ணமஸ்து என்று கூறக என்பதாகவும் அவர்களால் பூர்ணமஸ்து என்று கூறியதாக பாவித்து

119. பிறகு அவர்களின் அர்க்யத்தை விதிப்படி பாத்திரத்தில் வைத்து பித்ரு ஸ்தான மாகுக என்று பாத்திரத்தை கவிழ்ந்ததாக வைக்க வேண்டும்.

120. ஸுவர்ணம், வெள்ளி, தாமிர பாத்ரமாவது இலைகளால் ஏற்பட்டதுமான சுத்தமான போஜன பாத்திரத்தை எடுத்து போஜனத்திற்கு ஏற்றதாக செய்ய வேண்டும்.

121. ஹஸ்த ப்ரக்ஷõளனத்திற்காக தீர்த்தம் கொடுத்து திரும்பவும் சுத்தி செய்யவும். பங்த்தி தோஷ நிவ்ருத்திக்காக பரிகாரங்களை செய்து

122. எல்லா பாக விசுத்திக்காக சிவாக்ன யாஹுதி பூர்வமாக சிவாக்னியில் ஹோமம் செய்யப்போகிறேன் என்று அவர்களை கேட்டுவிட்டு

123.  அவர்களும் செய்வாயாக என்று அனுமதி பெற்று வஹ்ணியில் ஹோமம் செய்யவேண்டும். ஸோமாய பித்ருமதே ஸ்வதா நம: (ஸ்வாஹா) என்றும்

124. பிறகு யமாய அங்கிரஸே ஸ்வதா நம என்றும் அக்னயே கவ்யவாஹனாய ஸ்வதா நம: என்றும் கூறி ஹோமம் செய்ய வேண்டும்.

125. தத்புருஷ மந்திரம் ஸ்மரித்து ஹுதசேஷ அன்னத்தை போஜனத்திற்காக பித்ருக்களுக்கு மட்டும் வைத்து விட்டு பிண்டத்திற்காக மீதியை வைக்க வேண்டும். விச்வேதேவர்களுக்கு ஹோம சேஷம் தேவையில்லை.

126. கோபமின்றி இஷ்டமான அன்னம், ஹவிஷ்யம் (அபூபம்) தேன் கலந்த அன்னம்) தத்புருஷ மந்திரத்தால் நெய்யுடன் கூடியதாக அர்ப்பணிக்க வேண்டும்.

127. போஜன பாத்திரத்தை அகோர மந்திரத்தால் ஸ்பர்சித்து அந்தபாத்திரத்தை அபிமந்திரிக்க வேண்டும். பவித்ரீகரணத்திற்கு கவிழ்ந்த முகமாக வலது

128. கட்டைவிரலை தன்ஹஸ்தத்தால் எடுத்து பவீத்ரீகரணம் செய்து பிறகு விஸர்ஜித்து வாமதேவ மந்திரத்தையோ ம்ருத்யுஞ்சய மந்திரத்தையோ ஜபிக்க வேண்டும்.

129. அம்ருதத்வத்திற்காக போஜன பாத்திரத்தை சுற்றி கையால் ஜலத்தைக் கொண்டு சுற்ற வேண்டும். பித்ரு தேவர் கையில் முதலில் ஆபோசனத்திற்க்காக தீர்த்தம் கொடுக்க வேண்டும்.

130. சுகமாக போஜனம் செய்யவேண்டும் என்று பிறகு சுகமாக போஜனம் செய்கிறோம் என்பதாக அவர்கள் கூற வேண்டும். சக்திக்கு தக்கவாறு அதிதியை போஜனம் செய்வித்து போஜனகாலத்தில் விசாரணை செய்யாமலிருக்க வேண்டும்.

131. தேவன் தேவீ, குஹன், விஷ்ணு தர்மன் இவர்கள் ஸாக்ஷõத் சரீரத்தையுடையவர்களாக அதிதி ரூபமாக சஞ்சரிக்கிறார்கள். ஆகையால் அவர்களை விசாரிக்கக் கூடாது.

132. வடக்கு முகமாக இருந்து அவர்கள் திருப்தியாக புசிக்கும் வரை ஈசான மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்க வேண்டும். பிறகு அவர்களை திருப்தி ஆனீர்களா என்று கேட்டு அவர்களும் திருப்தி அடைந்தோம் என்று கூற வேண்டும்.

133. சாப்பிட்ட சேஷ அன்னத்தை பூமியில் விகிரான்னமாக மணலுடன் போட வேண்டும். சாப்பிட்ட இடத்திற்கு முன்பாக பசுஞ்சாணத்தால் மெழுகிட்டு

134. தெற்கு நுனியாக தர்ப்பை பரப்பி ஸத்யோத ஜாத மந்திரங்களால் திலத்தை போட்டு வாமதேவ மந்திரத்தால் எள்ளுடனும் எல்லா அன்னவகைகளுடனும்

135. தக்ஷிணாபிமுகமாக இருந்து தேன் நெய் எள்ளுடன் மூன்று பிண்டத்தையும் எடுத்து வலது காலை மடித்து மண்டியிட்டதாக செய்து

136. தர்ப்பைக்கு மேல் ஈசனாதி மந்திரங்களால் முறையாக வைக்க வேண்டும். வாமதேவ மந்திரத்தால் ஜலதாரை விட்டு பிண்டமிட வேண்டும்.

137. பட்டு அல்லது பருத்தி நூலை வஸ்திரமாகவும் எண்ணையும் அஞ்சனமும் கொடுக்க வேண்டும். கந்த புஷ்பாதிகளால் பூஜித்து நமஸ்கரித்து பிழை பொறுக்கி கேட்க வேண்டும்.

138. க்ஷமத்வம் என்று பித்ருக்களை கேட்டு மந்த்ரவத்தாக ஆசார்யன் முன்னதாக மூன்று பேறுக்கும் ஆசமனம் கொடுத்த பிறகு மற்ற இருவர்க்கும் ஆசமனம் செய்விக்க வேண்டும்.

139. ஆசமனம் செய்து சுத்த ஹஸ்தர்களான பிராமணர்களுக்கு ஆஸ்யசுத்திக்காக தாம்பூலத்தை கற்பூர சஹிதமாகவும் கொடுத்து அதன் அங்கமாக வீட்டிற்குபயோகமானவைகளை கொடுக்கவும்.

140. அவர்களின் திருப்திக்காக கோபூமி, தாச்யாதிகளையும் தக்ஷிணாதிகளையும் கொடுக்க வேண்டும். சிரார்த்தம் செய்பவன் தெற்கு முகமாக இருந்து உதகபூர்வமாந வர்த்தனியை

141. தரித்து ஸ்வதாகாரம் சொல்லுங்கள் என கூறி அவர்கள் ஸ்வதா என கூற வேண்டும். பிறகு ஈசானதித்ரய மந்திரங்களை நான்காம் வேற்றுமை யுடையதாக கூற வேண்டும்.

142. சிரார்த்தகர்தா ஈசாதிபித்ருக்கள் யாவரும் ஸ்வதாவா என்று கேட்டு அவர்கள் ஸ்வதா அஸ்து என்று கூறி பூமியில் ஜலத்தை விட வேண்டும்

143. இவ்வாறு மூன்று முறை செய்து பிறகு கூற வேண்டும். தேவர்களும் ருத்ரர்களும் திருப்தியாக கட்டும் என்று தான் கூற வேண்டும்.

144. எங்களுக்கு கொடையாளிகள் அபிவ்ருத்தியாகட்டும் சைவ சந்ததியும் அபிவ்ருத்தி அடையட்டும். இவ்வாறு கூறிய போது அவர்களால் இந்த வாக்யம் சொல்லப்பட வேண்டும்.

145. பிறகுசிராத்த கர்த்தா இவ்வாறு கூற வேண்டும். சிரத்தை எங்களுக்கு இருக்கட்டும். என்றும் அவகாஹநம் வேண்டாம் நிறையாக கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு இருக்கட்டும்.

146. என்று கூறி பிரியமான வார்த்தைகள் கூறி நமஸ்கரித்து க்ஷமாபனம் செய்ய வேண்டும். முன்பு அர்க்யபாத்திரத்தில் நிவேசிக்கப்பட்ட ஸம்ஸ்ரவாதிகளை உடைய

147. பித்ரு பாத்ரத்தை உத்தானம் செய்து விஸர்ஜிக்க வேண்டும். பித்ரு பூர்வமாக ஸத்யோஜாத மந்திரத்தால் அனுவ்ரஜிக்க வேண்டும்.

148. சிராத்த கர்த்தாவால் அன்ன சேஷங்களால் என்ன செய்வது என்று கூறப்பட்ட போது இஷ்ட பந்துக்களுடன் புசிக்க வேண்டும் என்று பிராமணர்கள் கூற வேண்டும்.

149. பிண்டங்களை பசு, பிராம்மணர்களுக்கோ கொடுத்து அல்லது அக்னி ஜலத்திலோ போட வேண்டும். குலபத்னீ மத்யம பிண்டத்தை சாப்பிட வேண்டும்.

150. பிறகு அவளுக்கு ருத்ராம்சமான லக்ஷணத்துடன் கூடிய பிள்ளை ஜனிக்கிறான். அவன், தீரன், ஸ்ரீமான், யசஸ்வி, வித்யாஸந்தானபாரகனாகவும் ஆகிறான்.

151. கர்ப்பாதானாதி ÷ஷாடசஸம்ஸ்காரத்தில் வ்ருத்தியாகிற நாந்தீ முகச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்யக் கூடாது.

152. மற்ற மங்களகரமான எல்லா கர்மகாலத்திலும் நாந்தீமுகசிராத்தத்தில் தயிர், தேன், கலந்ததும் யவையுடன் கூடிய பிண்டங்களை கொடுக்க வேண்டும்.

153. அபஸவ்யம் செய்வதும் அபிரதக்ஷிணமும் செய்யலாகாது. வ்ருத்தி சிராத்தங்களில் எப்பொழுதும் கிழக்கு முகமாக பிண்டங்களை கொடுக்க வேண்டும்.

154. வ்ருத்தி சிராத்தத்தில் கிழக்கு நுனியான தர்பங்களில் பிண்டபிரதானம் செய்ய வேண்டும். சிராத்தத்தில் பித்ருக்களை ஆராதிக்காமல் மற்ற எல்லா கர்மாவையும் செய்யக்கூடாது.

155. நித்யசிராத்தம் தைவமில்லாததாகும். ஏகோதிஷ்டம் அவ்வாறே ஆகும். ஏகோதிஷ்டசிராத்தம் விச்வதேவரின்றியும், ஏகார்க்ய, ஏகபவித்ரமாகவும் செய்யவேண்டும்.

156. ஆவாஹந அக்னிகார்யம் விலக்கப்பட்டதாகும். அபவஸ்யமும் அம்மாதிரியேயாகும். உத்திஷ்டதாம் அக்ஷய்யம் என்பது (தள்ளுபடியாகும்).

157. அபிரம்யதாம் என்று கர்த்தா கூறியதும் அபிரதாஸ்மஹே என்று சாப்பிட்டவர்கள் கூற வேண்டும். நிமித்த சிராத்தத்தில் ஒரு புருஷனையாவது நிமந்திரிக்க வேண்டும்.

158. முன்பு போல் ஸர்வகர்மாவை தன் பெயரால் செய்தால் அது மஹத்தாகும். கோ, பூமி, ஹிரண்யம், க்ருஹம், வாஹநம் ஆச்சாதனங்களையும்

159. வஸ்திரங்களையும், வெங்கல பாத்ரம் பலவித தான்யங்களையும் ஆஸனம், விசிறி, குடை பாதுகையுடன் கூடியதாக வேண்டும்

160. தலையணியுடன், படுக்கை மற்ற பொருட்களும் தீர்த்தாயுதமாக தக்ஷிணையை கொடுக்க வேண்டும்.

161. ஆசவுசாந்த தினத்தில் இந்த மஹத்தான ஏகோத்திஷ்டமும் அவ்வாறேயாகும். பிண்டோதகம் இல்லாததாகவும் அமந்திர மாகவும் நவசிராத்தம் செய்ய வேண்டும்.

162. உதகதானம் தூபமின்மை சந்தன புஷ்பங்கள் இன்றியும் செய்ய வேண்டும். பிண்ட பாத்திரத்தை வைத்து இருப்பவருக்கு பிண்டோதகம் என கூறப்பட்டுள்ளது.

163. ஜலதாரை பிண்டத்திற்கு மேல் சுற்றுதல் வேண்டியதில்லை. ஸ்வதாகாரம் நமஸ்காரம் தேவையில்லை என்கிறார்.

164. அக்னிகார்யம் செய்வது பிராம்மணர்களை விஜாரிப்பது இவைகள் தேவையில்லை அக்னௌகரிஷ்யே என்ற வாக்யத்தை ஏகோத்திஷ்ட சிராத்தத்தில் ஸம்மதமாகும்.

165. ஹவிஷ்யான்னத்தால் ஒரு மாஸமும் பாயஸத்தால் ஒரு வருஷமும் சிராத்தம் செய்தால் பிதாமஹர்கள் ஆசீர்வாதயுதமாகவும் வணங்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

166. செந்நெல் முதலான அன்னங்களாலும் காய்கறிகளாலும் சிராத்தம் செய்வதால் பித்ருக்கள் மாஸ விருத்தியால் த்ருப்தி அடைகிறார்கள் என்பது சந்தேஹமில்லை.

167. கயாவில் செய்யப்படுகிற சிராத்தம் எல்லா அனந்த பலனை கொடுக்க கூடியதாகும். கந்தோதக திலயுதமாக நான்கு பாத்ரம் அமைக்க வேண்டும்.

168. பித்ரு பாத்திரத்தில் அர்க்யத்திற்காகவும் பிரேத பாத்ரமாக பிரவேஸிக்க வேண்டும். அந்தந்த நாமங்களால் அகோர நாம பூர்வமாகவும் பிறகு பவன் என்ற பெயரோடு கூடியதாக வேண்டும்

169. ஓம் என்று முதலிலும் பித்ரு என்றும் கூறி மிகுதியான கார்யத்தை முன்பு போல் ஆசரிக்கலாம். நிமித்தத்திற்காக பித்ருக்களுக்கு மூன்று பாத்திரம் அமைக்க வேண்டும்.

170. ஸபிண்டீகரணமும் ஏகோத்திஷ்டமும் ஸ்த்ரீக்களுக்கும் செய்யப்படலாம் மற்ற எல்லா கர்மாவுக்கும் முன்பு உதாஹரணம் செய்தது போல் செய்ய வேண்டும்.

171. ஸபிண்டீகரணத்திற்கு முன்பாக அந்த பித்ருகர்மாவால் கர்மாவை செய்ய வேண்டும். பிறகு ஈசாதி பித்ரு நாமத்தால் எல்லா கர்மாவையும் செய்ய வேண்டும்.

172. யார்ஸ்பிண்டீக்ருத பிரேத பிண்டத்தை வேறு பிண்டத்துடன் சேர்க்கிறானோ அவன் பித்ருஹத்தியாகிறான். மாத்ரு ஹத்தி தோஷமுடையவனாகவும் ஆகிறான்.

173. ஆயுஷ்காமன் ஆயுளையும் தனகாமன் ஐஸ்வர்யங்களையும் வித்யாகாமன் மலமில்லா வித்யையும் ரதிகாமன் நல்ல ஸ்திரீகளையும் அடைகிறான்.

174. புத்ரன், சவுபாக்யம், ஆரோக்யம், யசஸ், வீர்யம், ஸ்ரியம் சுகம் இவைகளை நித்ய சிராத்தத்தால் அடைகிறான். துக்கமடைவதில்லை.

175. இறந்த பிதாவுக்கு புத்ரர்களால் சிராத்தம் செய்ய வேண்டும். தீக்ஷிதர்கள் க்ஞாதி பந்து, நண்பன் சிஷ்யன் வேலைக்காரன் ஆசார்யர்களாலும் சிராத்தம் செய்ய வேண்டும்.

176. புத்ரனில்லாத சமயத்தில் பத்னியும் பத்னி இல்லாதசமயத்தில் ஸோதரனும் யோக்யனாவான். அநுபநீதமும் அதீக்ஷிதனும் கூட சிராத்தகர்மா யோக்யனாவான்.

177. உபநயனமின்றி குடுமி மட்டும் வைத்திருப்பவன் உதக பிண்ட தானம் செய்யலாம். ஸ்வத,õகாரம் கூறி மந்திரோச்சாரம் செய்யக்கூடாது.

178. ஒரு வேஷ்டி தரித்தவனாக போஜனமும் தேவதார்ச்சனமும் செய்யலாகாது. தானம் ஆசமனம் ஹோமம், போஜயனம் தேவதார்ச்சனம்

179. மடித்தமர்ந்த பாதத்துடன் செய்ய வேண்டும். ஸ்வாத்யாயம் பித்ரு தர்ப்பணம் நன்கு அமர்ந்ததாகவும் ஜாநுஸகிதமாகவோ ஜங்காஸஹிதமாகவோ செய்ய வேண்டும்.

180. யார் பிறருடைய பிரதேசத்தில் பித்ருக்களுக்கு சிராத்தம் முதலியவைகளை செய்கிறானோ அந்த பூமி இறந்த பித்ருக்களால் சிரார்த்தகர்மாவை அனுபவிக்கப்படுகிறதாகும்.

181. காடு அடர்ந்த காடு, அரண்யம், நதிதீரம் ஆகிய எல்லா இடமும் ஸ்வாமியின் பிரதேசமில்லை அவைகளில் சிராத்தாதிகளை செய்யலாம்.

182. சண்டாளன் பன்றி, கோழி, இவர்களையும் போஜனம் செய்யும் பிராம்மணர்களை ரஜஸ்வலைஷண்டர் இவர்களையும் பார்க்க கூடாது.

183. ஹோமம் தானம், போஜனம், ஆகிய கார்யங்களில் மேற்கூறியவர்கள் பார்க்கப்பட்டால் தெய்வாராதனையிலும் ஹவிஸ்ஸில் பித்ருகர்மாவில் பார்க்கப்பட்டால் அதன் வழிப்படியின்றி சென்று விடும்.

184. கிழவர்கள், சிராவகர்கள், நிர்கந்தர்கள், சாக்யர்கள், வஸிப்பவர்களாகி தர்மத்தை அனுசரிக்காமலிருக்கிறார்களோ அவர் கீழ்தரமான தன்மையை அடைகிறான்.

185. மேற்கூரியவர்களால் அன்னம் ஹவிஸ் நெய் முதலியவை பார்க்கப்பட்டால் பிரதானத்திற்காக விடுதலை செய்ய வேண்டும். ஆபத்து காலத்தில் நமஸ்கரிக்க வேண்டும்.

186. பகலில் எட்டாவது பாகத்தில் சூர்யன் மந்தமான ஸமயமானது குதப காலமாகும். அந்த காலத்தில் பித்ரு கர்மா ஆரம்பிக்க வேண்டும்.

187. அல்லது வேறுவிதமாக குதபம் கூறப்படுகிறது. சிவவாக்யம், சவுசம், அக்ரோதகம் அதில் ஈடுபட்டதாகவும் பாத்ரம் வஹ்னி இவைகளும்

188. திலம், தர்ப்பம், காலம் இந்த ஒன்பதும் குதபம் எனப்படும். பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹர் ஆகியவர்களும்

189. கணங்கள் மற்றவர்களுக்கும் ஸர்வ ஸாமான்யராகிறார்கள். ஸ்வபித்ராதிகள் ஸாமான்யர் அல்ல. பித்ராதிகள் ஈசாதிகளாகும். அதே மாதிரி மாதா மஹாதிகளும் ஆவர்.

190. தன்னுடைய கணவனோடு செய்யப்படுகிற சமமான சிராத்தத்தையும் தாயார் அம்ருதத்திற்கு சமமாக உணவருந்தினாலும் அவ்வாறே தன் பிதாமஹி, பிரபிதாமஹி இவர்களும் செய்தாலும் தவறாகும்.

191. மேற்கூறிய மூவரும் பிண்டதேயர்களாகும். இவ்வாறு உள்ள போது பிண்டங்களை செய்தால் மோக்ஷம் அடைவதில்லை. மாத்ரு சிராத்தம் பித்ருச்ராத்தம் இரண்டும் சேர்ந்து செய்தால் கிழக்கு முகமாக

192. மாத்ரு சிராத்தத்தை முன்னதாக செய்து பிறகு பித்ரு சிராத்தம் செய்ய வேண்டும். புத்ரன் இல்லாமல் தாயார் இறந்தால் கணவன் ஸபிண்டீகரணம் செய்யலாம்.

193. ஏகோத்திஷ்டமும், ளபிண்டீகரணமும் பித்ருக்களுக்கு மாதிரி செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்திற்கு முன்பாக ஏகோத்திஷ்டம் செய்ய வேண்டும்.

194. பிண்டதானம் தனியாக செய்யக் கூடாது. மேற்படி கூறப்படுகிறது. ஸ்த்ரீயோ புருஷனோ அபுத்ரகர்களாக இறந்தால்

195. அவர்களுக்கு ஏகோத்திஷ்டமும் பிண்ட தானமும் செய்ய வேண்டும். பார்வணம் தேவையில்லை. பித்ராதி த்ரய பத்னிகளுக்கு உணவருந்த மட்டும் உரிமை உள்ளவர்களாகி ஆகிறார்கள்.

196. மாத்ரு சிராத்தத்திலும் ஸ்த்ரீகளுக்கு மேல்கூறியபடி தானம் செய்ய வேண்டும். பெண்ணானவள் உத்வாஹத்திற்கு பிறகு ஸப்தபதியில் தன் கோத்ரத்திலிருந்து விடுபடுகிறாள்.

197. ஸ்த்ரீகளுக்கு கணவன் (புருஷ) கோத்ரத்தினாலேயே அவருக்கு பிண்டோதகக்ரியை செய்ய வேண்டும். சதுர்த்தி ஹோம மந்திரங்களாலும் மாம்ஸ மஜ்ஜாதிகளாலும்

198. கணவனுடன் ஒருமை அடைந்து அந்த கோத்ரமடைந்தவனாகவும் பித்ரு கோத்ராபஹாரி மந்திரங்களால் பாணிக்ரஹணிகை ஆகிறாள்.

199. ஆஸுராதி விவாஹங்களில் விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்த்ரீகளின் மற்ற பர்த்தாவிற்கு எந்த கோத்ரம் பர்த்தாவால் நிர்வாஹிக்கப்படுகிறதோ அதையே நிர்வஹிக்க வேண்டும்.

200. குறைவில்லாத பிறப்பை உடையவளாகவும், மாற்று இடத்தை சார்ந்தவளாகவும் இருந்து இறந்தால் அவளைச்சேர்ந்த கோத்ரத்தை கூறியே சிராத்தம் பிண்டம் திலோதகம் இவைகளை கொடுக்க வேண்டும்.

201. ஜனனீ இருக்கும் பக்ஷத்தில் ஸ்பிண்டீ கரணாதிகமான பித்ரு கர்மாவை ஊர்தவ கோத்ர பித்ரு கோத்ரமாக பித்ரு தைவாராதனம் செய்ய வேண்டும்.

202. பித்ரு கோத்தரத்தை விட்டு விட்டு பாத்ரு கோத்ர அனுசாரமாக செய்யக்கூடாது.

இவ்வாறு சைவசிராத்த விதியாகிற இருபத்தியொன்பதாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar