நகரி : அனுமன் ஜெயந்தி ஒட்டி நகரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சித்துார் மாவட்டம் நகரி டவுனில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவில் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில், மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் சார்பில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் கலந்துக் கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் இருந்தவாறு தரிசித்தனர். நகரி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பிரசன்னா வீரஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.