Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி ... நெல்லை லெட்சுமி நரசிங்க பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை: ரூ.1 கோடிக்கு ஏலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
10:06

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஓராண்டிற்கு விற்கப்படும் பூஜைப் பொருட்களின் விற்பனை உரிமம் ஒரு கோடிக்கு மேல் ஏலம் போனது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நவக்கிரக மண்டபத்தின் முன் நவக்கிரக எண்ணெய் நவதானிய கிளி, ஆஞ்சநேய சுவாமிக்கு சார்த்தப்படும் வெண்ணெய், பன்னீர், மாலை, பிரசாத கடை, ஆன்மிக புத்தக விற்பனை கடை ஆகியவற்றிற்கு ஆண்டுதோறும் தேவஸம் போர்டு அலுவலகத்தில் ஏலம் விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பலத்த போட்டி ஏற்படும் இந்த ஏலத்தில் ஏலத்தொகையும் உயரும். இந்த ஆண்டும் ஏலத்தொகை கடந்த ஆண்டை போல ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏலம் போனது. ஏலத்திற்கு தேவஸம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், கோயில் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்து ஏலத்தை நடத்தினர். ஏலத்தில் எண்ணெய் கிளி, வெண்ணெய் விற்பனை உரிமம் 52 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும், பன்னீர் விற்பனை உரிமம் 14 லட்சத்து 18 ஆயிரத்திற்கும், பூமாலை விற்பனை உரிமம் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், பிரசாத ஸ்டால் உரிமம் 16 லட்சத்து 15 ஆயிரத்திற்கும், பூஜை சாமான் விற்பனை உரிமம் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், ஆன்மிக புத்தக விற்பனை உரிமம் 4 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.ஆக மொத்தம் ஒரு கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு பூஜை பொருட்கள் ஏலம் போனது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar