பதிவு செய்த நாள்
15
ஜூலை
2021
11:07
கலபுரகி: கலபுரகியின் காளகி சமஸ்தானத்தின் ஹிரே மடத்தின் புதிய பீடாதிபதியாக, 5 வயது சிக்க நீலகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
கலபுரகியின் காளகி சமஸ்தானத்தின் ஹிரே மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் சிவபசவ சிவாச்சார்ய சுவாமிகள். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கடந்த, 12ல் தெய்வீகமடைந்தார். பஞ்சாச்சார்ய தத்துவ முறைப்படி, நேற்று முன்தினம் மடத்தின் வளாகத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பீடாதிபதி இல்லாமல் இருக்க கூடாது என்பது காளகி சமஸ்தானத்தின் ஹிரே மடத்தின் விதிமுறை ஆகும்.எனவே, தெய்வீகமடைந்த சுவாமியின் சகோதரரின், 5 வயது மகன் சிக்க நீலகண்டன், புதிய பீடாதிபதியாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். சமஸ்தானத்தின் பெரியவர்கள், ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் சிறுவனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.நுாற்றுக்கணக்கான மடாதிபதிகள் முன்னிலையில், சிறுவனின் தலையில் பச்சை தலைப்பாகை அணிவித்து, பீடாதிபதிக்குரிய கொம்பு, கையில் வழங்கி, உடல் மீது காவி சால்வை அணிவிக்கப்பட்டது.