ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2021 05:07
சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஐந்து மாதத்திற்கு பின் நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இன்றி மாதாந்திர பூஜைகள் நடைபெற்றது. ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 21 ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஐந்து மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.