ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அம்மாநில அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு தளர்வு விதிக்கும் நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 16. 7 .2021 முதல் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பக்தர்களின் கோரிக்கையின்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் பக்தர்களை அனுமதிக்கப்படும் .மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலில் நடக்கும் ராகு - கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை கள் வழக்கம்போல் நடக்கும் என்றும் இதேபோல் கோயிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் கோவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடித்து வழக்கம்போல் நடத்தப்படும் என்றும் அனைத்து சேவகளிலும் பக்தர்களை அனுமதிக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ தெரியப்படுத்தினார்.