சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று தீ மதி உற்சவம் பக்தர்கள் இன்றி அமைதியான முறையில் நடந்தது.
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம் மிகவும் பிரபலம். இந்த உற்சவத்தின் போது செடல் விழா மற்றும் தீ மதி திருவிழாவில் சிதம்பரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலத்து அம்மனை வேண்டிக்கெண்டு நேர்த்தி கடன் செலுத்துவர். கொரோனா அச்சம் காரணமாக ஆடி மாத உற்சவம் பக்தர்கள் பங்கேற்பின்றி கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அதன் முக்கிய நிகழ்வாகன தீ மதி திருவிழா நேற்று நடந்தது. கோவில் நிர்வாகிகள் மற்றும் அரச்சகர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் தீ மதி திருவிழாவில் பங்கேற்று தீ மதித்தனர். இதில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபடவும், நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டுதல் வைக்கப்பட்டது.