ஸ்ரீரங்கம் : பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபயக் கோயிலான பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையுடன் கூடிய ஆண்டாள் சன்னதியில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி ஆடிப்பூரம் உற்சவம் தொடங்கி வரும் 11-ம் தேதி வரை பத்து நாள் உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தினமும் சன்னிதியில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி முதலியன அத்யாபகர்களால் (திவ்வியப்ரபந்த கோஷ்டி) பாராயணம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் இஷ்ட தெய்வமான கண்ணபிரானின் பால லீலைகளை உணர்த்தும் விதமாக ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி திருவாடிப்பூரம் மகோத்ஸவம் விமரிசையாக நடைபெற உள்ளது.