மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஆண்டாள், தனி சன்னிதியில் வீற்றுள்ளார். அவர் அவதரித்த ஆடி மாத பூர நட்சத்திர நாளான நேற்று காலை, கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது. ஆண்டாள், மூலவர் மற்றும் உற்சவருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது; திருப்பாவை சாற்றுமறை நடந்தது.