கடலுாரில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தலமாகதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குஆண்டுதோறும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.கொரோனாபரவலையொட்டி கோவில்கள் அடைக்கப்பட்டதால் கடந்த இரண்டுஆண்டாக பக்தர்கள் இன்றி ஆடிப்பூர விழா நடந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 2ம் தேதிதுவங்கியது. தினமும் காலை ஆண்டாள் திருமஞ்சனமும், மாலையில்ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள் புறப்பாடு நடந்துவந்தது.
ஆடிப்பூரத்தையொடி, நேற்று காலை தேவநாத பெருமாள்,ஆண்டாள் தாயார், தேசிகர் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலைசேவை சாற்று முறையும் நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்குபெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உட்பிரகார உலா நடந்தது.இரவு பள்ளியறை சேவை நடந்தது. கோவில் நேற்றுஅடைக்கப்பட்டதால் ஆடிப்பூரத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன்வெளியில் இருந்தபடியே கோவிலை தரிசித்துவிட்டு சென்றனர்.