பதிவு செய்த நாள்
16
ஆக
2021
02:08
கடம்பத்துார்: கடம்பத்துார் ஊராட்சியில் உள்ள புத்து கருமாரியம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துார் ஏரிக்கரை பகுதியில் உள்ளது புத்து கருமாரிஅம்மன் கோவில். இந்த கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு, நேற்று காலை 5:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனையும் அதை தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜையும், பூர்ணாஹூதியும், பின், இரண்டாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று, காலை 5:00 மணி முதல் 6:30 மணிக்குள், உற்சவ மூர்த்திக்கு மஹா கும்பாபிஷேகமும், கருமாரியம்மனுக்கு மஹா அபிஷேகமும் நடந்தது.அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதி உலாவும், இரவு 9:00 மணிக்கு தெருக்கூத்தும் நடந்தது.