Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் அரோகரா’ ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரோகிணி நட்சத்திர வழிபாடு கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி கங்கை கரையில் 11 லட்சம் தீபங்கள்: தேவ் தீபாவளி விழாவில் ஜொலித்த 84 படித்துறைகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசி கங்கை கரையில் 11 லட்சம் தீபங்கள்: தேவ் தீபாவளி விழாவில் ஜொலித்த 84 படித்துறைகள்!

பதிவு செய்த நாள்

25 நவ
2026
11:11

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கங்கை நதிக்கரையில் உள்ள 84 படித்துறைகளிலும் சுமார் 11 லட்சம் மண் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதால், நகரமே தீப ஒளியில் ஜொலித்தது. லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.


தீப அலங்காரத்துடன் லேசர் ஒளிக்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கங்கை ஆரத்தி என வாரணாசி விழாக்கோலம் பூண்டது. கங்கை நதிக்கரையில் ஏற்றப்பட்ட லட்சக்கணக்கான தீபங்கள் விண்மீன்கள் பூமியில் இறங்கியதைப் போன்ற காட்சியை உருவாக்கின.


பிரம்மாண்ட கங்கை ஆரத்தி: தசாஷ்வமேத படித்துறையில் கங்கா சேவா நிதி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 21 அர்ச்சகர்கள் மற்றும் 42 இளம்பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கங்கை ஆரத்தி நடைபெற்றது. தசாஷ்வமேதம் மற்றும் அருகிலுள்ள படித்துறைகளில் மட்டும் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் அனுப் ஜலோட்டா விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படுவது தேவ் தீபாவளியின் தனிச்சிறப்பு என்றார். வானில் விண்மீன்கள் மின்னுவதைப் போல, கங்கை கரையில் அகல் விளக்குகள் ஒளிரும் காட்சி உலகையே ஈர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விழாவின் முக்கிய அம்சமாக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 20 அடி உயரத்தில் அமர் ஜவான் ஜோதி மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 39-வது கோர்க்கா பயிற்சி மைய வீரர்கள் இசைக்குழுவுடன் இணைந்து இறுதி மரியாதை அணிவகுப்பு மற்றும் கார்டு ஆஃப் ஹானர் நிகழ்ச்சியை நடத்தினர்.


கங்கா சேவா நிதியின் ஏக் சங்கல்ப் கங்கா கினாரே என்ற இயக்கத்தின் கீழ், கங்கை நதியைத் தூய்மையாகவும் மாசற்றதாகவும் பாதுகாப்போம் என பக்தர்களிடம் உறுதிமொழி ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.  பணியின்போது உயிரிழந்த நான்கு பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாகீரத் சௌர்ய சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதார் ரஹ்மான் கான், கோஹலால் யாதவ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சசி காந்த் சிங், ராம்விலாஸ் சிங் யாதவ் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், கௌரவிக்கப்பட்ட வீரர்களின் குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கங்கா சேவா நிதி அறிவித்தது.


இசை நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழாவின் தொடக்கத்தில் டாக்டர் ரேவதி சகல்கர் மற்றும் தபேலா கலைஞரின் பக்தி, தேசபக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனுப் ஜலோட்டா உள்ளிட்ட கலைஞர்களும் கங்கை கரையில் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர். வேத மந்திரங்கள் முழங்க 21 அர்ச்சகர்கள் கங்கை ஆரத்தியைத் தொடங்கினர். ராம் ஜனம் யோகி 4 நிமிடங்கள் 21 விநாடிகள் தொடர்ந்து சங்கூதிய நிகழ்ச்சி நடத்தினார். துர்கா சரண் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவிகள் ரித்தி, சித்தி வடிவில் ஆரத்தியில் பங்கேற்றனர். காசி விஸ்வநாத் டம்ரு குழுவைச் சேர்ந்த 10 பேரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். லட்சக்கணக்கானோர் திரண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதுடன், கங்கா சேவா நிதி மற்றும் பாரத் சேவாஸ்ரம் சங்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் நீர் ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மத்திய ராணுவக் கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சய் மித்ரா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். உத்தரப் பிரதேச அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால், எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் பிரவீன் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாரத் சேவாஸ்ரம் சங்கத்தைச் சேர்ந்த துறவிகளும் விழாவில் கலந்துகொண்டனர். கங்கா சேவா நிதி தலைவர் சுஷாந்த் மிஸ்ரா, விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தார். ஆண்டுதோறும் நடைபெறும் தேவ் தீபாவளி விழாவில், கங்கை நதிக்கரையின் 84 படித்துறைகளிலும் ஏற்றப்படும் லட்சக்கணக்கான அகல் விளக்குகளே முக்கிய ஈர்ப்பாகத் திகழ்கின்றன. இந்த ஆண்டும் தீப ஒளி, பக்தி இசை மற்றும் பாரம்பரிய வழிபாடுகளுடன் வாரணாசி விழாக்கோலம் பூண்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 
temple news
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கார்த்திகை தீப உற்சவம் நிறை பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று திருமங்கையாழ்வார் சாற்றுமறை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டதால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar