Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை ... தீப ஒளியில் ஜொலித்த ஆதியோகி: கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடு தீப ஒளியில் ஜொலித்த ஆதியோகி: கோவை ஈஷா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்மலையில் 350 கிலோ நெய்யில் மகா தீபம்! கள்ளழகருக்கு சிறப்பு திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்மலையில் 350 கிலோ நெய்யில் மகா தீபம்! கள்ளழகருக்கு சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

25 நவ
2026
10:11

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கார்த்திகை தீப உற்சவம் நிறை பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அழகர்மலை உச்சியில் சுமார் 350 கிலோ நெய், 100 கிலோ திரி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை மலை அடிவாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருக்கார்த்திகையை முன்னிட்டு காலையில் சுந்தரராஜப் பெருமாள் எனப்படும் கள்ளழகருக்கு ஏகாந்தமாக திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் திருமடப்பள்ளியில் உள்ள நாச்சியாருக்கும் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமஞ்சனம் நடத்தினர். கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாகக் காட்சியளித்தது. மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் பூஜைப் பொருட்களை, கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் காலையிலேயே தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர். அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோம்பை தளத்துக்கு கரடுமுரடான மலைப்பாதை வழியாக அவற்றைக் கொண்டு சேர்த்தனர். அங்கு பிரம்மாண்டமான அண்டாவில் சுமார் 350 கிலோ நெய் நிரப்பப்பட்டது. மேலும், 100 கிலோ எடையுள்ள திரி, 3 கிலோ கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் ஆகம விதிமுறைப்படி தயார் செய்யப்பட்டன. மாலை 6.45 மணிக்கு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் பிரகாசமாக ஒளிர்ந்த மகா தீபத்தைப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


சோலைமலை முருகன், ராக்காயி அம்மன் கோயில்களிலும் தீபம்


அழகர்கோயிலின் உபகோயிலான அழகர்மலையில் உள்ள ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலிலும் மாலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோயில் ராஜகோபுரம் முன்பாக பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ராக்காயி அம்மன் கோயிலிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். சுவாமிநாதன் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டதால், ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் தங்க தேரோட்டம் நேற்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar