புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 50 ஆவது பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஹயக்ரீவர் கருட சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடை பெறுகிறது. பிரம்மோற்சவ விழாவில் நேற்று கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஹயக்ரீவர் கருட சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.