பதிவு செய்த நாள்
17
ஆக
2021
02:08
மதுரை-தேசத்தை முன்னேற்றுவதில் அரசும், தனியாரும் இணைந்து செயல்பட வேண்டும், என, காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
வாய்ப்புசுதந்திர தின விழாவை ஒட்டி அவர் பேசியதாவது:சுதந்திர இந்தியா கல்வி, நீர் மேலாண்மை, கிராமப்புற வளர்ச்சி, ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், விண்வெளித் துறையில் சாதனைகள் என முன்னேறி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய வலுவான இந்தியாவாகவும் வளர்வதற்கு, நல்ல சிந்தனைகள் தேவை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை பின்பற்றுகிறோம். மகாபாரதம், ராமாயணம், திருக்குறள் போன்ற நீதி நுால்களின் அடிப்படையில் தேசம் முன்னேறி வருகிறது.தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசும், தனியாரும் இணைந்து பயணிக்க வேண்டும். சிந்தனைகல்வி என்பது, வேலை வாய்ப்பை பெருக்கக் கூடிய விதத்திலும், பிறரை சார்ந்து இருக்கும் சூழ்நிலையை தவிர்க்கும் விதமாகவும் அமைய வேண்டும்.
கல்வி நிலையங்களை தரப்படுத்தி, சிறந்த உயர்படிப்பை ஏற்படுத்த வேண்டும். உலகில் நாம் சிறந்த சக்தியாக விளங்குவதற்கு தேவையான அனைத்தும் நம்மிடம் இருக்கிறது. அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது முக்கியம். கீதையின் அடிப்படையில் நம் சிந்தனைகள் அமைந்து, வளமான, அமைதியான, நற்பண்புகளை வளர்க்க பக்தி, சேவை, விஞ்ஞான அடிப்படையில் மேன்மேலும் வளர்ந்து சிறப்பு பெறுவதற்கு முயற்சிப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.