பதிவு செய்த நாள்
21
ஆக
2021
09:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில் உள்ள மலையையே, பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமிதோறும், 14 கி.மீ., சுற்றளவு துாரமுள்ள மலையை, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. தற்போது ஆவணி மாத பவுர்ணமி திதி, இன்று, (21ல்,) மாலை, 7:20 மணி முதல், 22 மாலை, 6:17 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.