ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்; ஜனாதிபதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 02:08
அயோத்தி: ‛‛ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம், என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமாயண கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: ராமாயணத்தை, கலை மற்றும் கலாசாரம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல ராமாயண கருத்தரங்கை ஏற்பாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. அதில் உள்ள தத்துவங்களுடன் ராமாயணம், நமது வாழ்க்கையை வழிநடத்த தேவையான அனைத்து நடத்தை விதிமுறைகளை வழங்குகிறது. ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியம். ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடு கிடையாது. தண்டனை சட்டமும் கிடையாது. ராம் இருக்கும் இடத்தில் தான் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் வசிக்கிறார். எனவே தான், இந்த இடம் உண்மையில் அயோத்தி. இவ்வாறு அவர் பேசினார்.