பதிவு செய்த நாள்
30
ஆக
2021
02:08
கோவை: ஒன்பது இந்து அமைப்புகள் சார்பில், கோவையில் 65,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்து முன்னணி சார்பில், கோவையில் 30,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.அதற்கான ஏற்பாடுகளை, அந்த அமைப்பு நிர்வாகிகள் துவங்கி செய்து வருகின்றனர். அதே போல் இந்து மக்கள் கட்சி, சிவசேனா , பாரத்சேனா, தமிழகசேனா, விவேகானந்தர் பேரவை, அனுமன்சேனா , விஸ்வஹிந்துபரிஷத் (தமிழ்நாடு)ராஷ்ட்ரிய ஹிந்துபரிஷத் திருக்கோவில்கள், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பா.ஜ., ஆகியவை சார்பிலும், 30,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.மாவட்டம் முழுக்க, 65,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி, சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும். குளக்கரையோரங்களில் விசர்ஜனத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.