அவிநாசி , ராயம்பாளையம் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில் உள்ளது. திருப்பணிகள் முடிவுற்றிருந்தன. நான்கு காலயாக பூஜைகளுக்கு பின், நேற்று அதிகாலை, 5:45 மணியளவில், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காட்டு மாரியம்மன் சன்னதிகள் மற்றும் கோபுரத்துக்கு புனிதநீரால் கும்பாபிேஷகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 12 நாட்களுக்கு மண்டல பூஜை தினமும், மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது.