Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் ... மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் மாரியம்மன் கோவில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

06 செப்
2021
09:09

நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நாகை கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை, சிவபெருமானை நினைத்து கடலில் விட்டு விடுவது வழக்கம். அவரது நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் வலையில் மீன்கள் சிக்காமல் இருக்கச் செய்தார். இதனால், நாயனாரின் குடும்பம் வறுமையில் வாடியது. சில நாட்கள் கழித்து, அதிபத்த நாயனாரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி சிவபெருமான் திருவிளையாடல் செய்துள்ளார்.

வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் முதல் மீனான ஒரே ஒரு மீனையும், இறைவனை நினைத்து மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.குடும்பத்தினர் வயிற்றுக்கு உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில் நவரத்தினங்களால் ஆன தங்கமீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது இது, அருட்கூத்தாடும் எம்பெருமான் சிவனுக்கு உரியது என்று மகிழ்வோடு கடலில் விட்டுள்ளார். அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடபவாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி காட்சியளித்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நம்பியார் நகர் மீனவர்கள் சார்பாக, கடலில் தங்க மீன்விடும் நிகழ்வு வெகு விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, நம்பியார் நகர் கிராம கடற்கரையில் எளிமையான முறையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நீலாயதாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் நேற்று மாலை நம்பியார் நகர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், கோவிலில் இருந்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் விடும் நிகழ்வு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar