சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பொதுமக்கள் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று காலை முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.