ராமேஸ்வரம்: இன்று அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதித்ததால், சாலையில் தடுப்பு வேலி அமைத்தனர். தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடுவர். அதிலும் அமாவாசையில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து நீராடுவது வழக்கம். அதன்படி நேற்று ஞாயிறு, இன்று (செப்.,6) அமாவாசை யொட்டி பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதை தவிர்க்க நேற்று கடற்கரை சாலையில் போலீசார் தடுப்பு வேலி அமைத்தனர். மேலும் நேற்று முதல் தனுஷ்கோடி தேசிய சாலை மூடியதால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்வதை தவிர்க்க வேண்டும். நாளை (செப்., 7) முதல் அக்னி தீர்த்தத்தில் நீராடி கோயிலில் தரிசிக்கவும், தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உண்டு.