திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு மூலவர் பெரியாயிக்கு மகா அபிஷேகம், வெற்றிலை காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கொரோனா தடை காரணமாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் விழா நடந்தது.