பதிவு செய்த நாள்
12
செப்
2021
03:09
திருத்தணி அரக்கோணம் சாலை முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகர் சக்தி விநாயகர் கோவில், சித்துார் சாலை விநாயகர் கோவில் உட்பட, திருத்தணி சுற்று வட்டார கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.* திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் 11 விநாயகர் சிலைகள் உடைய ஏகாதச செல்வ விநாயக சபை அமைந்துள்ளது. இங்கு காலை 10:30 மணிக்கு 11 விநாயகர் சிலைகளுக்கு, பல அபிஷேகங்கள் நடந்தன.விநாயகர் சிலை பறிமுதல்விலை விர்ர்ர்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூரில், சாமந்தி பூ கிலோ 280க்கும், கரும்பு ஜோடி 100 ரூபாய்க்கும், கம்பு 20 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள், பூஜை பொருட்கள் விலையும் அதிகமாக இருந்தது.