மானாமதுரை: மானாமதுரை நாகலிங்க நகர் மெக்கநாச்சியம்மன் கோயில் 13 ம் ஆண்டு வருஷாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை மெக்கநாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம் உட்பட சிறப்பு அபிேஷக, ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வருஷாபிேஷகத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் முருகானந்தம், கணேசன், ஆறுமுகம், நமச்சிவாயம் செய்திருந்தனர்.