விநாயகருக்கு ‘ஸ்கந்த பூர்வஜன்’ என்றொரு பெயர் உண்டு. இதற்கு ‘கந்தனுக்கு மூத்தவன்’ என்பது பொருள். சிவலோகத்தில் உள்ள பூத கணங்களின்(தொண்டர்கள்) தலைவர் என்பதால் ‘கணபதி’ எனப்படுகிறார். செயலில் தடை ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நம் பாவமே. இதற்குரிய தண்டனை கிடைக்கும் வரை தடைகளை ஏற்படுத்துபவர் என்னும் பொருளில் ‘விக்னேஸ்வரர்’ என்கிறோம். தடையை போக்குபவரும் அவரே. ‘விக்னம்’ என்றால் ‘தடை’. பெரிய வயிறு கொண்டவர் என்பதால் ‘லம்போதரன்’ எனப்படுகிறார். இந்த உலகமும், உயிர்களும் அவரது வயிற்றில் அடங்கியிருப்பதால் பானை வயிறாக காட்சியளிக்கிறார்.