காசியில் டுண்டி ராஜகணபதி கோயில் உள்ளது. ‘டுண்டி’ என்பதற்கு ‘தொந்தி’ என்பது பொருள். பெருவயிறு கொண்டவர் என்பதால் தொந்தி கணபதி என்கிறோம். அந்த ‘டுண்டியே’ தமிழில் ‘தொண்டி’ என மாறியுளளது. இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டியில் விநாயகர் கோயில் உள்ளது. தொண்டி கடலில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்ட ராமர் வந்த போது, ‘இங்கு கட்டுவதை விட ராமேஸ்வரத்தில் இருந்து பாலம் கட்டினால் இலங்கை செல்வது எளிது’ என இங்குள்ள விநாயகர் வழி காட்டினார். ராமரின் வெற்றிக்கு துணை நின்ற இவரை வணங்கினால், உங்களது சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.