பதிவு செய்த நாள்
18
செப்
2021
08:09
சேலம்: புரட்டாசி பிறப்பையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், நேற்று காலை, 5:45 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. உற்சவருக்கு ராஜஅலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால், வெளியே நின்று தரிசனம் செய்தனர். மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 8:00 மணிக்கு சாத்தப்பட்டது. கோவில் முன், நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதில், கொரோனாவால் செப்., 17, 18, 19, 24, 25, 26ல், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரத்து: காடையாம்பட்டி தாலுகா, காருவள்ளி வெங்கட்ரமணர் கோவில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் கூறுகையில், கொரோனா பரவல் தடுப்பு விதி அமலில் உள்ளதால், நடப்பாண்டு கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறில் கோவில் மூடப்பட்டு, வழக்கம்போல் பூஜை மட்டும் நடக்கும், என்றார்.