பதிவு செய்த நாள்
18
செப்
2021
08:09
புரட்டாசி முதல் சனி இன்று தொடங்குவதையொட்டி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சங்ககிரி ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சங்ககிரி, அதை சுற்றியுள்ள பெருமாள் சுவாமிகள் உள்ள மலைகளில், அக்., 31 வரை, வெள்ளி, சனி, ஞாயிறில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று முதல், அக்., 16 வரை, புரட்டாசி சனி காலை முதல் ஞாயிறு வரை, கோவில், அதன் அடிவாரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் கூட, வருகை தரவும் அனுமதி இல்லை. அன்னதானம் உள்ளிட்டவை எனக்கூறி, மக்களிடத்தில் வசூலில் ஈடுபடவும் யாருக்கும் அனுமதி கிடையாது. மீறி, கோவில் பெயரை பயன்படுத்தி வசூலில் ஈடுபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.