புதுச்சேரி : புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில் களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் நுழையும் முன் பக்தர்கள் அனைவருக்கும் கைகளை சுத்தப் படுத்திக் கொள்ள கிருமி நாசினி வழங்கப் பட்டது.காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.