பதிவு செய்த நாள்
19
செப்
2021
02:09
காரைக்கால் : நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மலையப்பன் சுவாமியாக பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், நித்ய கல்யாணப் பெருமாள், மலையப்பன் சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் செய்தனர்.திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர் முன்னதாக தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.இதேபோல, மாவட்டத்தில் உள்ள பார்வதீஸ்வரர், பத்ரகாளியம்மன், அம்மையார் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.