பதிவு செய்த நாள்
20
செப்
2021
04:09
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கை தொகையாக, 43.76 லட்சம் ரூபாய் இருந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. பொது உண்டியல், அன்னதானம், திருப்பணி, கோசாலை உண்டியல்களில், 43 லட்சத்து, 76 ஆயிரத்து, 743 ரூபாய் பணம் இருந்தது. மேலும், 63 கிராம் தங்கம், 2 கிலோ 623 கிராம் வெள்ளி இருந்தது.இத்தொகை, சோமையம்பாளையம் பாங்க் ஆப் இந்தியா கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, மருதமலை துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.