தேய்பிறை பஞ்சமி: வராகியை வழிபட தடைபட்ட காரியங்கள் வெற்றி அடையும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2026 10:10
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வராகி அம்மன், தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவள். பவுர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். வீட்டில் வாராகியம்மனுக்கு விளக்கேற்றி செம்பருத்தி. செவ்வரளி, பானகம். உளுந்து வடை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. மாதுளை, சிவப்பு அவல், ஏதேனும் இனிப்பு. பாயசம் அல்லது வெல்லம் போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். வீட்டில் ஐந்து விளக்கேற்றி அந்த விளக்கில் வராகி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வராகிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்.. இன்று வராகி அம்மனை வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும். மன பயம் நீங்கி தைரியம் பிறக்கும்!