நாராயணபுரத்தை ஆட்சி செய்த மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் ஒருமுறை ஏழுமலை மீதுள்ள வேங்கடாத்ரிக்கு யானை வேட்டைக்காகச் சென்றிருந்தார். செல்லும் வழியில் அழகான பஞ்சவர்ணக்கிளி ஒன்றைக் கண்டார். அதன் தெய்வீக அழகில் ஈடுபட்ட மன்னர் கிளியை விரட்டிச் சென்றார். பக்தியில் சிறந்த அந்தக் கிளி ‘வெங்கடேசா கோவிந்தா’ என்று திருநாமங்களைப் பாடியபடி பறந்தது. தன் இருப்பிடமான சுவாமி புஷ்கரணி என்னும் குளக்கரையை அடைந்தது. அங்கு சென்ற மன்னர், சுயம்பு மூர்த்தியாக நின்ற வெங்கடேசப் பெருமாளைக் காணும் பேறு பெற்றார். தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் ஏழுமலையானுக்கு கோவில் நிர்மாணித்து இந்த மன்னரே பிரதிஷ்டை செய்தார்.