பதிவு செய்த நாள்
04
அக்
2021
01:10
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி புனித ஜெப மாலை மாதா தேர் திருவிழாவில், விதிகளை மீறி கூட்டம் சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை சர்ச்சில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சர்ச்சில் தேர் திருவிழா நடந்துள்ளது. இதில், விதிகளை மீறி, ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இத்தகவல் பரவியதால், பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் முருகேசன் தலைமையில் திரண்ட தொண்டர்கள், கருமத்தம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து முறையிட்டனர். எலச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரை அடுத்து, சர்ச்சுக்கு சென்ற போலீசார், அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து போக கூறினர். கடைகளை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.