சென்னை: தென் மாவட்டங்களுக்கு தசரா பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி தசரா பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை வருவதால் துாத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதுபோன்ற பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் வெளியூர் செல்வதால் ஆம்னி பஸ் கட்டணங்கள்இ பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. தமிழக அரசும் ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யவில்லை.
இதன் காரணமாக, ஏழை நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ஏழைஇ நடுத்தர மக்களை காப்பாற்றும் வகையில் சென்னை கோவையில் இருந்து திருச்செந்துார் துாத்துக்குடி திருநெல்வேலிஇ நாகர்கோவில் தென்காசி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.