குடகு: குடகு மடிகேரியில் உள்ள, ‘மடிகேரி தசரா’ எனப்படும் கரக உற்சவம் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு, மடிகேரி நகர தசரா கமிட்டி, தசமண்டப கமிட்டி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படுவது வழக்கம் . இந்த ஆண்டுக்கான கரக உற்சவம், நேற்று முன் தினம் இரவு நடந்தது. நான்கு அம்மன்களின் கரங்களுக்கு பம்பின ஏரியில் சம்பிரதாய முறையில் பூஜை நடத்தப்பட்டு ஊர்வலம் துவங்கியது. அங்கிருந்து மகாதேவ பேட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், கன்னிகாபரமேஸ்வரி கோவில், பேட்டை ஸ்ரீராமர் கோவிலில் பூஜை நடத்தப்பட்டு பின் கரகங்கள் அந்தந்த அம்மன் கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்து விமரிசையாக கொண்டாடப்படும் கரகதிருவிழா இம்முறை கொரோனா விதிமுறைப்படி எளிய முறையில் கொண்டாடப்பட்டது.